உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள்


உலகில் அதிக சோம்பேறிகள் வாழும் நாடுகள்

உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆபிரிக்க நாடான  மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 விடுக்காட்டினர் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 விடுக்காடு) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில்  (68.8 விடுக்காடு) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

ஒரு வாரத்தில் 2.5 மணி நேரங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

122 நாடுகள் இக்கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் விடுக்காடு 63.3 ஆகும்.

இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15  விடுக்காட்டினரே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.

சேர்பியா, ஆர்ஜன்டினா, மைக்ரோனேஸியா, குவைத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளன.  அமெரிக்கா இப்பட்டியலில்  46 ஆவது இடத்திலும் மலேசியா 10 ஆவது இடத்திலும் காணப்படுகின்றது.

இக் கணிப்பீட்டு தகவலானது  செயலற்றவர்களாக  உள்ள மக்களை சுறுசுறுப்பானவர்களாக இயங்கச் செய்வதற்கு வழிவகுக்குமென கருதப்படுகிறது.

முதல் 10 இடத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்

1   மால்டா: 71.9%

2   சுவாஸிலாந்து: 69.0%

3   சவூதி அரேபியா : 68.8%

4   சேர்பியா: 68.3%

5   ஆர்ஜென்டினா: 68.3%

6   மைக்குரோனிசியா: 66.3%

7   குவைத்: 64.5%

8   பிரிட்டன்: 63.3%

9   ஐக்கிய அரபு குடியரசு: 62.5%

10  மலேசியா: 61.4%

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: