புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்

கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெருந்திட்டத்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது மக்கள் அதனைப் பார்க்க முடியும். இறுதித் திட்டம் அமைச்சரவைக்கு டிசம்பர் மாதம் சமர்பிக்கப்படும்.

மொழி

– முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு வரையில் ஆண்டுக்கு இரு முறை ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலும் (Linus)மாணவர்கள் எழுத்தறிவிலும் எண் அறிவிலும் சோதனை செய்யப்படுவர். (தற்போது பாஹாசா மலேசியாவில் மட்டும் அது நடத்தப்படுகின்றது)

– பள்ளிக்கு பிந்திய நேரத்தில் நான்காம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையில் நிவாரண ( remedial ) வகுப்புக்களை நடத்துவது ( 2017ம் ஆண்டு வாக்கில் ரிமூவ் வகுப்புக்களை அகற்றும் நோக்கத்துடன் ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலில் பிரச்னை உள்ளவர்களுக்கு)

– எல்லா ஆங்கில மொழி ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேம்ப்ரிட்ஜ் அடிப்படை சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

– உயர்ந்த அடைவு நிலையைக் கொண்டவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட வழிகள்: யூபிஎஸ்ஆர்-க்கு 5 ஆண்டுகள் (6 ஆண்டுகளுக்குப் பதில்), எஸ்பிஎம்-க்கு 4 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்குப் பதில்) – அறிவியல், கணிதப் பாடங்களுக்கான சோதனைகள் அனைத்துலக மாணவர் மதீப்பீடு (Pisa) அடிப்படையிலும் அறிவியல், கணித கல்விக்கான போக்கு (Timss) அடிப்படையிலும் இருக்கும்

– 11 ஆண்டுகளுக்குக் கட்டாயப் பள்ளிக்கூடக் கல்வி (இப்போது 6 ஆண்டுகள்). 2020 வாக்கில் எல்லா பள்ளிக்கூடப் படிப்பை முடிக்கின்ற அனைவரும் எஸ்பிஎம் அல்லது அதற்கு இணையான தகுதிகளைப் பெற்றிருப்பார்கள்.

– சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்கள் 2025க்குள் போதுமான வசதிகளைக் கொண்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.

– ஒவ்வொரு பிள்ளையும் 2025 வாக்கில் மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக் கொள்ளும் (முதலில் சீனம், தமிழ், அரபு மொழிகள் முதலில் தொடங்கப்படும்). ஸ்பானிய, பிரஞ்சு ஜப்பானிய மொழிகள் பின்னர் வழங்கப்படும்)

பண்புகள்

– ஒவ்வொரு மாணவரும் சமூகச் சேவையில் பங்கு கொள்ள வேண்டும்.

– தார்மீகப் பாடங்களும் இஸ்லாமிய ஆய்வியல் பாடங்களும் பொதுவான பண்புகள் இருக்கும் வேளைகளில் கூட்டாக நடத்தப்படும். இஸ்லாமிய ஆய்வியல் பாடங்கள் இஸ்லாமிய அடிப்படைப் பண்புகள் குறித்தும் மற்ற சமயங்களின் அடிப்படைப் பண்புகள் மீதும் கவனம் செலுத்தும்.

– Rancangan Integrasi Murid Untuk Perpaduan (RIMUP) தனியார் பள்ளிக்கூட மாணவர்களையும் இணைத்துக் கொள்வது.

கற்பித்தல்

– 2013ம் ஆண்டு வாக்கில் பட்டதாரிகளில் 30 விழுக்காட்டினர் ஆசிரியர்களாக இருக்கும் நோக்கத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தகுதியை உயர்த்துவது.

– தலைமை ஆசிரியர்கள் ஆண்டுதோறும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வர். சகாக்கள், பெற்றோர்கள் ஆகியோரது கருத்துக்களும் பெறப்படும் சாத்தியம் உண்டு.

– விரைவான வாழ்வாதார முன்னேற்றம்; உயர்ந்த அடைவு நிலையை கொண்டவர்கள் DG41 தகுதியிலிருந்து  DG54 தகுதிக்கு 25 ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு பெறுவர்.

– நல்ல அடைவு நிலையைப் பெறாதவர்கள் புறப்பாட நடவடிக்கைகள், கட்டொழுங்கு அல்லது நிர்வாகம் போன்ற கற்பிப்பது சாராத பணிகளுக்கு மாற்றப்படுவர்.

– உயர்ந்த அடைவு நிலையைப் பெறும் தலைமை ஆசிரியர்களை கிராமப்புறப் பள்ளிகளுக்கு அல்லது குறைந்த அடைவு நிலையைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது.

– ஆசிரியர்களுக்கு நிர்வாக வேலைகளைக் குறைத்து கற்பிக்கும் பணிகளை அதிகரிப்பது.

பள்ளிக்கூடங்கள்

– உயர்ந்த அடைவு நிலைகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு தொடக்கம் நிதி ஒதுக்கீடுகள், பாடத் திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் சரளமான போக்கு.

– 2015ம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு பள்ளிக்கூடங்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கும் (சபா, சரவாக்கில் முதலில் தொடங்கப்படும்)

– 2013ம் ஆண்டு வாக்கில் எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் paedagogyக்காக 4ஜி இணைய வசதிகள்.

அமைச்சு

– மாநிலக் கல்வித் துறைகளிலிருந்தும் தலைமை அலுவலகத்திலிருந்தும் 2,500 ஊழியர்கள் மாவட்டக் கல்வித் துறைகளுக்கு மாற்றப்படுவர்.

பெற்றோர்கள்

– பெற்றோர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை இணையத்தின் வழி கண்காணிக்க முடியும்.

– மேலும் 500 அறநிதிப் (Trust schools) பள்ளிக்கூடங்கள்.

வெளிப்படைத்தன்மை

– இந்த பெருந்திட்டத்தின் இலக்குகள் அடையப்படுள்ளதை மதிப்பீடு சேய 2013ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் அறிக்கை பொது மக்களுடைய பார்வைக்கு வழங்கப்படும்.

– 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் பெருந்திட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வது.

நிதிகள்

– ஆசிரியர் பயிற்சிகள் போன்ற அவசியமான பகுதிகளுக்கு (critical areas) நிதிகளை வழங்குவது, அவசியமில்லாத திட்டங்களுக்கு நிதிகளைக் குறைப்பது.