முக்ரிஸின் கூற்று ‘குறைந்த விலை கார்கள் சாத்தியம்தான்’ என்பதை நிரூபிக்கிறது

துணை அமைச்சர் ஒருவர், கார்களின் இறக்குமதிக்குக் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (ஏபி) பொதுச் சந்தையில் விற்கப்பட்டால் அதன் மதிப்பு ரிம60,000என்று கூறியிருப்பது பக்காத்தான் ரக்யாட்டின் மலிவு விலை கார்கள் சாத்தியமானவைதாம் என்பதை நிரூபிப்பதாக பிகேஆர் கூறுகிறது.

“ஆண்டுக்கு 70,000 ஏபிகள் வெளியியிடப்படுவதாக வைத்துக்கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கும் மக்களுக்கும் ரிம3பில்லியனிலிருந்து ரிம3.5பில்லியன்வரை இழப்பு ஏற்படுகிறது”, என்று அதன் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார்.

அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சு ஒவ்வொரு உரிமத்துக்கும் ரிம10,000 என்று விலை நிர்ணயிப்பதால் இந்த இழப்பு ஏற்படுகிறது என்றாரவர்.

கலால் வரியை நீக்கித்தான் கார் விலையைக் குறைக்க வேண்டும் என்பதால் அதனால் ஏற்படக்கூடிய வருமானக் குறைவைச் சரிக்கட்ட  அந்த ரிம4பில்லியன் கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடந்த வாரம், முக்ரிஸ் மகாதிர், கெடாவில் ஜெர்லூன் தொகுதி அம்னோ கூட்டத்தில் உரையாற்றியபோது வெளியிட்ட ஒரு குறிப்பை அடிப்படையாக வைத்து ரபிஸி இவ்வாறு கருத்துரைத்தார்.

TAGS: