ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள் நாடு முழுதும் தொடர்கின்றன


ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள் நாடு முழுதும் தொடர்கின்றன

ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் திரு வேதமூர்த்தி நாடு முழுதும் சென்று மலேசிய இந்தியர்களை சந்தித்து வருகிறார்.மலேசிய இந்தியர்கள் மலேசியாவிற்கு எப்படி கொண்டுவரப்பட்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழக்கினார்கள், நாம் இந்நாட்டிற்கு எப்படியெல்லாம் உழைத்திருக்கிறோம்  போன்ற விவரங்களை தெளிவாக விளக்கி வருகிறார்.

மேலும் மலேசிய இந்தியர்களின் சார்பில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தொடக்கபட்டுள்ள வழக்கின் நோக்கம், அதன் அடிப்படை போன்ற சட்ட விளக்கங்களையும் பொது மக்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளும்  வகையில் விளக்குகிறார்.

நாடு முழுதும் இது வரையில் சுமார் இருபதாயிரம் மக்களை சந்தித்து இருக்கிறார். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12  ஆம்  தேதி கெடா, கோலா கெட்டில் டேவான் சூய் லியான் கொங், (0125558603)  , செப்டம்பர் 14 டெங்கில், அம்பார் தெனாங் ஸ்ரீ மயூர நாதர் ஆலயம் (0105425972), செப்டம்பர் 15 டேவான் JKK  ராசா, உலு சிலாங்கூர் (0172756282) , செப்டம்பர் 16 டேவான் சே ஹெங் கோர் , மேந்தாக்கப் , பஹாங் (0199839577) ஆகிய இடங்களில் அவர் சுற்று வட்டார மலேசிய இந்தியர்களை சந்திக்க இருக்கிறார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு 7 .30 க்கு துவங்கும். இதனையே அழைப்பாக ஏற்று ,மலேசிய இந்தியர்களின் உண்மையான  வரலாற்றையும் , இந்நாட்டில் நாம் இழந்த உரிமைகளுக்கு தொடர்ந்து எவ்வாறு ஹிண்ட்ராப் குரல் கொடுக்க போகிறது என்பதையும் சுற்று வட்டார மக்கள் திரளாக வந்து தெரிந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

-சந்திரமோகன் கணேசன், ஊடக தொடர்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, செப்டம்பர் 11, 2012.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: