முஹைடின்: பிஎன் எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் தயாராக உள்ளது ஆனால்

சிலாங்கூர் அரசாங்கத்தை பீடித்துள்ளதாக கூறப்படும் பல பிரச்னைகள், அந்த மாநிலம் பிஎன் எடுத்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளது என்பதற்கான அர்த்தம் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.

அந்தப் பிரச்னைகளில் தலாம் விவகாரமும் தண்ணீர், மணல் சர்ச்சைகளும் அடங்கும் என அவர் சொன்னார்.

அந்தப் பிரச்னைகள் பக்காத்தான் ராக்யாட் தலைமையிலான  மாநில அரசாங்கத்தை ஆட்டிப் படைப்பதாக முஹைடின் கூறிக் கொண்டார்.

“நாம் சிலாங்கூர் பிரச்னைகள் பற்றிப் பேச வேண்டுமானால் சிலாங்கூரை ஆட்சி புரிவதற்கு போதுமான ஆற்றலை பக்காத்தான் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்பதை மக்களுக்கு புரிய வைப்பதற்கு இப்போது உள்ள விஷயங்கள் போதுமானவை. அது தெளிவானதாகும். ”

“ஆனால் கேள்வி இதுதான். நாம் சிலாங்கூரை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?” என முஹைடின் இன்று காலை செலாயாங் அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டில் வினவினார்.

அதற்கு அங்கு கூடியிருந்த 800 பேராளர்களில் ஒரு சிலரே சாதகமாகப் பதில் அளித்தனர். ஆனால் கூட்டத்திலிருந்த பலர் ‘இல்லை’ என கூச்சலிட்டனர்.

அதனால் ஒரளவு அதிர்ச்சி அடைந்த துணைப் பிரதமர் சிலாங்கூரில் பக்காத்தான் தோல்விக்கு “சூழியல் முறைகள்” கனிந்து விட்டன எனச் சொன்னார். ஆனால் பிஎன் -னுக்குள் நிலவும் உட்பூசல் அந்த மாநிலத்தை திரும்ப எடுத்துக் கொள்வதற்கான பிஎன் வாய்ப்புக்களை சீர்குலைத்து விடும் என அவர் எச்சரித்தார்.