தமிழா நம் நிலை என்ன என்று புரியுதா ?

தமிழா… பெர்சே 3.௦ இந்தியருக்கு  அவசியம் அற்ற ஒன்று. ஏனென்றால் இன்னும் பலர் அடிமை எண்ணம் மாறாமல் இருக்கின்றோமே…. நீயும் நானும் சொல்லி இவர்கள் திருந்தவா போகிறார்கள்!

நமக்குத் தெரியும் ஏன் பெர்சே 3.௦௦ வந்தது என்று. இண்ட்ராப் வந்த பின்பு மறுக்கபட்ட இந்தியர்களுக்குரிய  உரிமை சிறிது அளிக்கபட்டது. பலர் இன்னும் நம்மை மலேசியர்களாக ஏற்றுகொள்ள வில்லை. நாமும் ஒரு மூலையில் உறங்கிக் கிடக்கிறோம். அறிவாளி முன்னேறிவிட்டான், சிலர் கூஜா துக்கி முன்னேறிவிட்டனர், சிலர் அடுத்தவரின் உழைப்பில் முன்னேறி விட்டனர். பலர் இன்னும் விடியலுக்காக உறங்குகின்றனர்!

இதில் போலீசும் அடிச்சு கொன்ற பின்புதான்,  இது தப்பு; இப்படி செய்ய கூடாது என்று வசனம் பாடுகிறது. அவர்கள் வெறும் பொம்மைகள். ஆட்டிவைப்பவன் யார் என்று தெரிந்தும் ஏன் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை ? அதிகாரம் நம் கையில் இருந்தும் அடிமைத் தனம் காரணமாகவும், பயத்தால்  மற்றும் அறியாமையால் (முட்டாள் ) விற்று விட்டோம் ஓட்டை. இப்போது வருந்தி என்ன பயன்?

அம்பிகாவும் இண்ட்ராப்பும் வந்து பயன் இல்லை. காரணம் நாம் ஹீரோ வேண்டும் என்கிறோம். அப்படி வந்தால் ஆதரவு தராமல் அவர்களை சுற்றலில் விட்டு விட்டு நாம் ஓடி விடுகிறோம். காரணம் நமக்கு குடும்பம் இருக்கு; எதிர்காலத்தில் நம் பிள்ளைகளின் நிலைமை பற்றி என்ன கவலை. அவர்களும் நம்மைப் போல் அடிமையாய் அந்நிய நாட்டில் வாழ போகிறார்கள். பின்பு என்ன கவலை?

பெர்சே 3.௦ அர்த மற்றது; உரிமை யாருக்கு வேண்டும். எவன் ஆண்ட என்ன? ஒரு ஓட்டுக்கு ஐம்பது ரிங்கிட் கிடச்சாலும் போதும். ஒருவேளை மதிய உணவு முப்பது ரிங்கிட் ஆனாலும் பரவாயில்லை. ஒருநாள் உதியம் நாற்பது ரிங்கிட் ஆனாலும் பரவாயில்லை. அரசியல் கட்சி நம்மை காக்கும் சுயநம்பிக்கையும் மூளையும் நாம் அவர்களிடம் அடமானம் விட்டு விட்டோம்….

முட்டாள் நிறைந்த நாட்டில் அறிவாளி பயன் அற்று போகிறான். தமிழா நம் நிலை என்ன என்று புரியுதா ?

– சிவ லிங்கம்