ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை பாரட்டத்தக்கது!

எனது அனுபவத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை நல்லதாகவே தெரிகின்றது. பெரும்பாலோர் அரசியலையும் கல்வியையும் கலக்கின்றனர். தம்பிராஜா அரசியல் வாழ்கையில் எதுவேணுமானாலும் செய்யட்டும், அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் என்ன நடக்கிறது மட்டும்தான் இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று.

இன்று தலைநகரில் கூடுதல் வகுப்பு ஒரு பாடத்திற்கு ஐம்பதிலிருந்து நூறு வெள்ளி வரை வசூலிக்கப்படுகிறது. ஏழு அல்லது அதற்கும் அதிகமான பாடத்திற்கு எவ்வளவு தேரும்? அந்த முறையில் ஸ்ரீ முருகன் நிலையம் குறைவாகவே பணம் வசூலிக்கின்றனர்.

படிப்பில் இறை வழிபாட்டைக் கலக்க வேண்டுமா என்று கேட்பவர்களே, நம் நாட்டில் தமிழ்ப்பள்ளியில் சமய போதனை வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இங்கு அப்படி செய்வதை தப்பு என்று கூறுகிறீர்கள். நம் சமுதயத்தில் சமய போதனை எவ்வளவு உள்ளது? படிப்பில் உள்ள அக்கறை ஆன்மீகத்திலும் இருக்க வேண்டுமென்பதை ஏன் மறுக்க வேண்டும்? இங்கு தியான முறைகளும் கட்டொழுங்கும் போதிக்கப்படுகிறது. நன்னெறிகளை சொல்லித்தருவதில் என்ன தவறு?

ஸ்ரீ முருகன் மீதான குறைகளை நான் மறுக்கவில்லை. ஒரு வகுப்பில் அளவுக் கதிகமான பிள்ளைகள் இருப்பது உண்மைதான். வகுப்புகளுக்கு ஆசிரியர் வராமலிருப்பது, அதிக பல்கலைகழக மாணவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது போன்றவற்றை கண்டிப்பாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் சரி செய்ய வேண்டும்.

ஸ்ரீ முருகன் சென்டர் மற்ற கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, தம்பிராஜா அதை செய்தவர் இதை செய்தவர், என்று சாடுவதெல்லாம்  அநாவசியமானது.

-லேக்ஸ்