தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசியக் கல்விக் கொள்கை மீதான கலந்துரையாடல்

மலேசியக் கல்விக் கொள்கை மீதான கல்வி அமைச்சு கொண்டிருக்கும் கருத்தாக்கங்களின் மீது தமிழர்களின் தார்மீக உணர்வுகளையும் உரிமைகளையும் நிலைகொள்ளும் பொருட்டும் தாய்மொழியின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் மன திடம் இருக்க வேண்டும்.

மலேசியக் கல்வித் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த எண்ணியுள்ள அரசாங்கம் பல்லின மொழிகளை அரவணைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது எந்த அளவு உண்மை?

தமிழர்களின் பண்பாட்டு காப்பகமாக விளங்கும் தமிழ்க்கல்வியின் நிலை உயருமா, தற்காக்கப்படுமா அல்லது என்னவாகும்? இவற்றை நாம் விவாதிக்க வேண்டாமா? நமது உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டாமா?

மலேசிய தமிழர்களுக்கு இருக்க வேண்டிய முகாமை பொறுப்புகளையும் உணர்வுகளையும் தீவிரப்படுத்தி தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையும் செயலூக்கம் பெற மலேசியத் தமிழ் அறவாரியம் எதிர்வரும் 7.10.2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மணி 4.00 தொடக்கம் 7.00 மணி வரை டான்ஸ்ரீ சோமா அரங்கில் மலேசிய அரசின் கல்விக் கொள்கை மறுசீரமைப்பு மீதான கருத்து சேகரிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தாய்மொழியின் மேலும் தமிழ்ப்பள்ளிகளின் பாலும் அக்கறையும் ஆர்வமுள்ள அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

தொடர்புக்கு: தமிழ் அறவாரியம் – 03-26926533