வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?


வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

இந்தியர்களின் காவலன் மஇகா என்பதைவிட ம.இ.கா. என்ற மாபெரும் கட்சியின் பெயரில் பதவி, பட்டம், ஆகியவற்றை அனுபவித்தது உட்பட பணத்தை கொள்ளை அடித்த தலைவர்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

30 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைத்த சமுதாய துரோகி ம.இ.காவை சின்னாப் பின்னமாகி விட்டு, இந்நாட்டில் பல இந்திய அரசியல் கட்சிகளை உருவாக்கி  ம.இ.காவுக்கு சாவு மணி அடித்து விட்டார்.

அதோடு மட்டுமல்ல இந்தியர்களின் ஆதரவு ம.இ.காவுக்கு கிடைக்கா வண்ணம் கட்சியையும் குழி தோண்டி புதைத்து விட்டார். 30 ஆண்டுகள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மௌன சாமியாக இருந்து விட்டு இந்திய சமுதாயத்தையும் அடகு வைத்து விட்டார்.

கடந்த 2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ம.இ.கா. நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே வென்றது. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அது எத்தனை தொகுதிகளைப பிடிக்கும் என்பது எட்டாக்கனிதான்.

சூரிய கூட்டுறவுக் கழகத்தில் பண மோசடி, 18 கோடி வெள்ளி கடனுதவியில் மோசடி, ராதா ரவிக்கு டத்தோ பட்டம் ஆகிய விவகாரங்கள் இந்தியர்களின் மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?

பொறுத்திருந்து பாப்போம்…

– மரத் தமிழன், கோலாலம்பூர்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: