மத்திய கிழக்கு நாடுகள் மலேசியாவை முன்மாதிரியாக நினைக்கின்றன

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மலேசியா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்கிறார் அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்.

“லிபியா, எகிப்து போன்ற நாடுகள் மலேசியாவை வெற்றிகரமான மிதவாத முஸ்லிம் நாடாக மதிக்கின்றன. நாம் ஜப்பானை நோக்குவதுபோல் வட ஆப்ரிக்க நாடுகளுக்கு மலேசியா ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ்கிறது”, என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

இன்று கோலாலும்பூரில் மலேசிய-ஜப்பான் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசினார்.

“அவர்கள் நம்மிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்”, என்றாரவர்.

நாளை தாம் எகிப்துக்குப் பயணமாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘கிழக்குநோக்கும் கொள்கை- ஒரு புதிய கோணம்’ என்ற தலைப்பைக் கொண்ட அம்மாநாட்டைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மலேசிய-ஜப்பான் ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசிய-ஜப்பான் பொருளாதார சங்கம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அது சங்கம் ஏற்பாடு செய்த 31-வது மாநாடாகும்.

TAGS: