அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு


அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு

இலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’ திரைப்படம்.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது,  “இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப்போகிறது. இலங்கை கடலுக்குள் படகுக்குள்  சுடப்பட்டுக்கிடந்த  ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலில் அனாதையாகிறான். அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான்.  இதுதான் கதை.  இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில்,

‘மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால்
மண்ணகம் அதை மறுப்பதில்லை
இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும்
இங்கு யாரும் அகதியில்லை’ என்று கூறியுள்ளேன்.

தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர் களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்லவேண்டாம் இடம்பெயர்ந் தவர்கள் என்று சொல்லுங்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு.  அகதி என்றால் ஏதுமற்றவர்.   அதிதி என்றால் விருந்தாளி.  நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும்.

இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது.  அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: