TNB மின்கட்டணம் மக்களுக்குச் சுமையாக இல்லாபடிக்கு அரசாங்கம் உறுதிப்படுத்தும்

மலேசியாவில் மின்சார விநியோகம் அரசுக்குச் சொந்தமான தெனாகா நேசனல் பெர்ஹாட்டின் (TNB) ஏகபோக உரிமையாக இருந்தாலும், மக்களுக்குச் சுமையாக இருக்கும் அளவுக்கு மின்கட்டணம் உயர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது.

“அரசாங்கம் அதன் வழியில் மின் கட்டணம் பயனீட்டாளர்களுக்குப் பெரும் சுமையாக ஆகிவிடாமல் கட்டுப்படுத்தி வைத்துள்ளது”, என்று எரிபொருள் பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள துணை அமைச்சர் நோரியா கஸ்னோன் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

டிஎன்பி-இன் மின்கட்டண உயர்வு பற்றி முகம்மட் நாசிர் ஜக்கரியா கேட்ட துணைக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

“மின்சாரத்துறை ஏகபோக உரிமையாக இருந்தாலும், மின் உற்பத்தியில் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடமளிக்கப்படுகிறது”, என்றாரவர்.