என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை


என்எப்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்று அரசாங்கம் ஆலோசனை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம 250 மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

“நிதி அமைச்சு, விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு, சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் ஆகியவை பொருத்தமான நடவடிக்கை எடுப்பது பற்றிப் பல தடவை கூடிப்பேசியுள்ளன….”, என்று 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது.

ஃபீட்லோட் மையம் அதன் இலக்குகளை அடையவில்லை என்பதை முதன்முதலில் கவனத்துக் கொண்டு வந்தது 2010 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை.

அதன்பின் பிகேஆர், என்எப்சிக்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனை அந்நிறுவனம் அதன் சகோதர நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டு அவை அப்பணத்தை ஆடம்பர கொண்டோமினியம்களிலும் உணவகத்திலும் சிங்கப்பூரில் ஒரு பேரங்காடியிலும் முதலீடு செய்த விவகாரத்தை அம்பலப்படுத்தியது.

அதற்கு எதிர்வினையாற்றிய என்எப்சி, அதன் அறுப்புக்கூடம் கட்டி முடிப்பதற்குக் காத்திருக்கும் வேளையில் ஆதாயம் பெறுவதற்காக கையில் உள்ள பணத்தைச் சொத்துகளில் முதலீடு செய்ததாகக் கூறியது.

இப்போது என்எப்சி தலைவர் முகம்மட் சாலேமீது நம்பிக்கை மோசடி செய்ததாகவும் 1965 நிறுவனச் சட்டத்தை மீறியதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: