கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை


கணக்கறிக்கை- பரிகாரங்கள் தேவை

உங்கள் கருத்து: “பிரச்னையைவிட அதன்பிறகு ஒருவர் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம்.”

கெடா இல்லாத வீடுகளைப் பழுதுபார்க்க பணம் செலவிட்டுள்ளது

பெர்ட் டான்:  அரசு ஊழியர்களிடம் ஊழல், கடமை தவறுதல் முதலிய பிரச்னைகள் எப்போதுமே இருந்து வருகின்றன. தவறு செய்பவர்கள் அதற்கு எந்தக் காரணமும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், அதைவிட சம்பந்தப்பட்ட அரசு, நடந்த தவற்றைத் திருத்த என்ன நடவடிக்கை மேற்கொள்கிறது என்பது முக்கியமாகும்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பதில்லை என்று பிஎன் அரசை எப்போதும் குறை சொல்லி வந்திருக்கிறோம்.

இப்போது கெடா அரசின் நேர்மைக்குச் சோதனை நேர்ந்துள்ளது. அங்குள்ள பிரச்னைக்கு அது என்ன செய்யப்போகிறது?

கெடா அரசு தானே விசாரணை நடத்தி,  குற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டால் குற்றவாளிகளைப் பாதுகாக்க முற்படாமல் போலீசில் புகார் செய்ய வேண்டும். அதன்வழி, தாங்கள் பிஎன்னிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதைக் காண்பிக்க இயலும்.

நீதி, நியாயம்: எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்ப்போம். சம்பந்தப்பட்டவர்கள் பிஎன்னோ, பாஸோ, பிகேஆரோ, டிஏபியோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கெடா என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

விழிப்பானவன்: சிலர் ஊழல் செய்பவர்கள், திறமைக் குறைவானவர்கள் என்பதை என்னால் ஏற்க முடியும். ஆனால், திறமைக்குறைவுக்கும், மடத்தனத்துக்கும், நேர்மையின்மைக்கும் எதிராக தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்காதிருப்பதைத்தான் ஏற்க முடியாது.

கெங்: இதுதானே அவர்களின் முதல் அனுபவம். அத்துடன் பிஎன் அரசில் பணிபுரிந்த அதே ஆள்கள்தானே பாஸ் அரசிலும் பணி புரிகிறார்கள். பழக்கம் சட்டென்று மாறிவிடாது.

ஒஎம்ஜி: நிர்வாகக் குறைபாட்டுக்கு இப்படியெல்லாம் காரணம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. நல்ல நிர்வாகத்துக்குப் பொறுப்புடைமை முக்கியம். என்ன நடந்தாலும் அதற்கு மந்திரி புசார்தான் பொறுப்பு. மாநில அரசு நடந்த தவற்றைத் திருத்த வேண்டும். மீண்டும் நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெயரிலி#49857050: இங்குதான் பக்காத்தான் விழிப்பாக இருக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் அதற்கு மந்திரி புசாரே காரணம் என்றாலும் அதைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அசிசான் அப்துல் ரசாக் ஐந்தாண்டுகளாக மந்திரி புசாராக இருக்கிறார். அவரது நிர்வாகத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். தேவை என்றால் அவரை மாற்றவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

விளையாட்டு வேண்டாம்: ஏதோ குருட்டு யோகத்தில் கெடாவில் வெற்றி பெற்று விட்டதை பாஸும் அசிசானும்  நன்கு அறிவார்கள். 13வது பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் நம்பிக்கை இல்லை. அதனால்தான் காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ள பார்க்கிறார்கள்.

பெயரிலி_5fb: அப்ப….கெடாவின் அடுத்த மந்திரி புசாராக முக்ரிஸ் மகாதிர் வர வேண்டும் என்கிறீர்களா? அது முடியாது. அசிசானுக்குத் தகுதி இல்லை என்றால் பக்காத்தானிலேயே தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுப்போம். இதனிடையே அசிசான் நடந்த தவற்றுக்கு விளக்கம் கூற வேண்டும்.

சினம்கொண்ட வாக்காளன்: முன்பே நான் சொன்னேன், இப்போதும் அதைத்தான் சொல்கிறேன்- அசிசான் அப்பதவிக்குப் பொருத்தமானவர் அல்லர்.

அவர் சமய விவகாரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம். ஆனால், மாநில பொருளாதார நிர்வாகம் பற்றி அவர் அறிய மாட்டார்.

அபு: அசிசான் இன்னொரு நூற்றாண்டைச் சேர்ந்தவர். கெடா எம்பி-ஆக இருக்க அறவே பொருத்தமற்றவர்.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: