மசீச பேராளர்களின் புதிய தோற்றம்

மசீச பேராளர்கள் வெள்ளைச்சீருடையில் பேராளர் கூட்டங்களில் கலந்துகொள்வதுதான் மரபாக இருந்து வந்தது. அம்மரபில்  ஒரு மாற்றம்.  இன்று 59-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள் பிஎன் நிறமான நீலநிறத்தில் டி-சட்டை அணிந்திருந்தார்கள்.

இப்புதிய டி-சட்டைகளின் இடப்புற கையில் 1மலேசியா சின்னம் இருக்கிறது.  வலக்கையில் “பிஎன்னைத் தேர்ந்தெடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

சட்டையின் பின்புறத்தில், அதன் பரம வைரியான டிஏபி-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசகங்கள் உள்ளன.

“பக்காத்தான் பரப்புரையை எதிர்க்க இதுதான் சரியான வழி”, என்று ஒரு பேராளர் கூறினார்.

சில டி-சட்டைகள் “பாஸ் ஹூடுட் வேண்டாம் என்று சொல்லுங்கள்”, சில “மாற்றமா? இரண்டே ஆண்டுகளில் போண்டி ஆகப் போகிறீர்கள்” போன்ற வாசகங்களைக் கொண்டிருகின்றன.

கூட்டத்தைத் தொடக்கிவைக்க வந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் நீலநிற டி-சட்டையில்தான் வந்தார்.

TAGS: