மே 13 திரைப்படம் – தூங்கும் அரக்கனை எழுப்ப வேண்டாம்


மே 13 திரைப்படம் – தூங்கும் அரக்கனை எழுப்ப வேண்டாம்

உங்கள் கருத்து: “நல்ல சிந்தனை கொண்ட அரசாங்கம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் திரைப்படங்களையே காட்டும். வன்முறைகளையும் ரத்தக்களறிகளையும் அல்ல. மே 13 திரைப்படத்தில் என்ன நாட்டுப்பற்று காட்டப்படுகின்றது?”

மாக்லின்: ஒற்றுமையைப் போதிக்க மே 13 திரைப்படம் அவசியம்

நியாயமானவன்: நான் அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசமான சாலை விபத்துக்களை சித்தரிக்கும் காட்சிகளைக் காட்டுங்கள். அது பலன் தரும். நம் அனைவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கைதான் உள்ளது. அதனை இழக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

பாலியல் வன்முறைகள், மனைவிகளை துன்புறுத்துவது போன்ற மனித முரட்டுத்தனத்தைக் காட்டும் போது இரண்டு வகையான விளைவுகளே ஏற்படும். மற்றவர் துன்பம் அனுபவிப்பதை பார்த்து சந்தோஷப்படும் மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவர். நியாய சிந்தனை கொண்டவர்கள் அதனை வெறுப்பர்.

இப்போது 1969ம் ஆண்டு மே 13 சம்பவத்தைச் சித்தரிக்கும் வன்முறைக் காட்சிகள் பற்றி ஆராய்வோம். என்ன விளைவுகள் ஏற்படும் ? நீங்கள் நினைப்பதையே நானும் நினைக்கிறேன்.

குவிக்னோபாண்ட்: கொள்கை அளவில் சரிதான். ஆனால் உண்மையில் அது கல்வியா அல்லது வரலாற்றை மாற்றி எழுதுவதா அல்லது பிரச்சாரமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடப்பு கூட்டரசு அரசாங்கம் உண்மைகளை திரிப்பதையும் பொய்கள், ஜோடனைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதையும் கருத்தில் கொண்டால் அந்தத் திரைப்படம் புகட்டும் பாடம் பற்றிய சந்தேகம் மலேசியர்களுக்கு எழுவது இயல்பே.

பூமிஅஸ்லி: தாண்டா புத்ரா என்ற அந்த திரைப்படம் இன்னும் திரையிடப்படாத வேளையில் அதன் இனவாதத் தாக்கம் குறித்து முன் கூட்டியே கருத்து சொல்லக் கூடாது என எப்படி துணை அமைச்சர் ஒருவர் சொல்ல முடியும் ?  அந்தத் திரைப்படத்தை திரையிட்டு விட்டு அதன் விளைவுகளைக் கண்காணிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தமா ? பின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ள நீங்கள் தயாரா ? மே 13 ஒரு மோசமான கனவு. அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர மலேசியர்கள் விரும்பவில்லை.

நல்ல சிந்தனை கொண்ட அரசாங்கம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் திரைப்படங்களையே காட்டும். வன்முறைகளையும் ரத்தக்களறிகளையும் அல்ல. அது அரசாங்க ஆதரவு பெற்ற நாட்டுப்பற்று திரைப்படம் என்று சொல்வதற்கு உங்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது ? மே 13 திரைப்படத்தில் என்ன நாட்டுப்பற்று காட்டப்படுகின்றது ?

சரியானவன்: அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாரிசான் நேசனலுக்குப் போதிக்க அதற்குத் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது.

ஏமாந்தவன்: திரு மாக்லின் டெனிஸ் டி குருஸ் அவர்களே, பதவிக்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்வீர்கள்.

Supercession: “ஒற்றுமை” என்பதற்கு ‘அம்னோ வலிமைக்கு யாரும் சவால் விடுக்கக் கூடாது’ என அர்த்தம்.

அடையாளம் இல்லாதவன் #18452573: National Geographic Society அந்த திரைப்படத்தைத் தயாரித்தால் எனக்கு ஒரளவு ஆர்வம் பிறந்திருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் அது தெளிவானது. நீங்கள் அம்னோ பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்தால் அதனைப் பாருங்கள்.

கடந்த காலத்தை பின்னுக்கு வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதுவும் நம்மைப் பிரித்து வைத்து ஆட்சி புரியும் பிஎன் கண்ணோட்டத்தில் அந்தக் கதை சொல்லப்படுகிறது என அறிந்திருந்தால் அதனை பார்க்க வேண்டாம்.

பெர்க்காசா, அம்னோ ஆகியவற்றுக்கும் மசீச, மஇகா, கெரக்கான் ஆகியவற்றில் உள்ள அவற்றின் ஆதரவாளர்களுக்காக  அந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அஸ்தமனமாகி விட்ட பிபிபி கட்சியைக் குறிப்பிட மறந்து விட்டேன்.

அம்னோ எதிர்ப்பாளன்: பிஎன் -னுக்கு தோதாக வரலாறு திரித்து எழுதப்பட்டுள்ளது என ஏற்கனவே கூறப்பட்டுள்ளதால் அந்தத் திரைப்படத்தை எல்லா மலேசியர்களும் புறக்கணிக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஒவ்வொரு சென் -னையும் நாம் வீணாக்கக் கூடாது.

அவர்கள் நஷ்டப்பட வேண்டும். எதிர்காலத்தில் எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் அது பாடமாக இருக்க வேண்டும். அந்தத் திரைப்படத்துக்கான செலவுகளை முழுமையாக பிஎன் ஏற்றுக் கொண்ட போதிலும் உண்மையான மலேசிய மக்களிடமிருந்து அவர்கள் ஒரு சென் -னைக் கூட மீட்க நாம் அனுமதிக்கக் கூடாது.

ஜேயூஸ்: வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி கண்டால் கலவரம் மூளும் என எச்சரிப்பதற்காகவே அந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் திரையிடப்படவிருக்கிறது. தில்லுமுல்லு வேலைகள் பயனளிக்காத போது பயமுறுத்தும் படலம் தொடங்கியுள்ளது.

அது உண்மையில் ஒற்றுமையை வலியுறுத்தும் என்றால் ஒருவர் மற்றவரின் பண்பாட்டையும் சமயத்தையும் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு நேசிக்கத் தொடங்குவர் என நீங்கள் உண்மையில் எதிர்பார்க்கின்றீர்களா ?

 

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: