உங்கள் கருத்து : பத்துமலை ‘கொண்டோ’ சர்ச்சை மஇகா-வின் புவா பாலா II

“பத்துமலைக்கு அருகில் எந்த மேம்பாடும் இருக்கக் கூடாது என மஇகா சொல்கிறது. ஆனால் ஏன் 2007ம் ஆண்டு திட்ட  அனுமதி வழங்கப்பட்டது ?”

பத்துமலை ‘கொண்டோ’-வுக்கு கோகிலன் பக்காத்தானைச் சாடுகிறார்

முழுக் குப்பை:  முன்னாள் சிலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும்- அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர் ஏ கோகிலன் பிள்ளை உட்பட அனைவரும் ஊழலுக்காக விசாரிக்கப்பட வேண்டும்.

2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பிஎன் தோற்கடிக்கப்பட்டு மாநில ஆட்சியை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்ட பின்னர் புதிய நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்ளாத வேளையில் அந்தத் திட்டம் ஏன் அங்கீகரிக்கப்பட்டது ?

அந்தத் திட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் என்ன ? அந்தத் திட்டத்தை  புதிய மாநில அரசாங்கம் நிராகரிக்கும் என அப்போதைய நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் மேம்பாட்டாளருக்கும் தெரிந்ந்திருக்க வேண்டும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

இப்போது கோகிலன் எப்படித் துணிச்சலாக பக்காத்தான் மீது பழி போடுகிறார்.

otak_Otak: இது போன்ற பல திட்டங்களுக்கு நான் பொறியியலாளராகவும் கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளேன். அதனால் எனக்கு நடைமுறைகள் நன்கு தெரியும். கோகிலன் LCP என்ற ‘laporan cadangan pembangunan’ னை ஆய்வு செய்வது நல்லது. அந்த LCP -உடன் அந்தத் திட்டத்தின் முழு விவரங்களை உள்ளடக்கிய KM விண்ணப்பமும் இணைக்கப்பட்டிருக்கும்.

அவர் ஒன்று அந்த விவகாரம் பற்றி அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது பொய் சொல்ல வேண்டும்.  கட்டுமான அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தால் அந்தத் திட்டத்தை செலாயாங் நகராட்சி மன்றம் (MPS) நிறுத்த முடியும்.

பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டு அதனை ரத்துச் செய்தால் MPS மீது சிவில் வழக்குப் போடப்படலாம். அப்போது பெரும் இழப்பீடு கொடுக்க வேண்டி வரலாம். இப்போது (MPS) அதனை ரத்துச் செய்தால் மேம்பாடு தள்ளிப் போகும். அதனால் மேம்பாட்டாளர் வெறுப்படைந்து அந்தத் திட்டத்தைக் கை விடலாம்.

அடையாளம் இல்லாதவன் #03913649: இது மஇகா வழி நடத்திய இன்னொரு பிஎன் குளறுபடி.  பத்துமலைக்கு அருகில் எந்த மேம்பாடும் இருக்கக் கூடாது என மஇகா சொல்கிறது. ஆனால் ஏன் 2007ம் ஆண்டு திட்ட அனுமதி வழங்கப்பட்டது ?

ஜிம்மி: 2000-த்தாவது ஆண்டுக்கு முன்னர் அந்த நிலம் வர்த்தகப் பயனீட்டுக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்துக்கான முழு வரைபடமும்- கடைகள், ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் உட்பட- பிஎன் ஆட்சிக் காலத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது.  ‘kebenaran merancang’ (மேம்பாட்டு ஆனை பிஎன் காலத்தில் கொடுக்கப்பட்டது.

கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இப்போது மட்டும் ஏன் கூச்சல் போடுகின்றீர்கள் ?  அதனை ரத்துச் செய்தால் நீங்கள் மேம்பாட்டாளருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்- அது மக்கள் வரிப்பணத்திலிருந்து தான் கொடுக்கப்பட வேண்டும்.

கல் உடைப்புப் பயனீட்டிலிருந்து வர்த்தகப் பயனீட்டுக்கு அந்த நிலத்தை மாற்றுவதற்கு அனுமதித்த தவறுக்காகவும் அடுத்து ‘kebenaran merancang’ அனுமதி கொடுத்ததற்காகவும் அந்தத் திட்டத்தைத் தொடருவதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது மேம்பாட்டாளருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

அனோன்: கோகிலன் அவர்களே கட்டுமானத் திட்டத்தில் கட்டிடத்தின் உயரம் தெரிவிக்கப்படாமல் மேம்பாட்டு ஆணை (DO) கொடுக்கப்பட்டதாக நீங்கள் எப்படிச் சொல்ல முடியும் ? அந்த DO-வைப் பெறுவதற்கு கட்டிட திட்டம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

சமூகவாத எதிர்ப்பாளன்:  மாநில அரசாங்கம் என்ற முறையில் பக்காத்தான் ஏன் அந்த விஷயத்தை ஏற்கனவே எழுப்பத் தவறி விட்டது ? அந்தத் திட்டத்தை பிஎன் அங்கீகரித்தது. பக்காத்தான் அது குறித்து மௌனமாக இருந்தது. ஆகவே இரு தரப்புமே பழியை ஏற்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்_40f4: இது பினாங்கு கம்போங் புவா பாலாவைப் போன்ற இன்னொரு விவகாரமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2007ம் ஆண்டு பிஎன் பேராளர்கள் செலாயாங் நகராட்சி மன்றத்தில் இடம் பெற்றிருந்த வேளையில் பிஎன் அந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுத்தது.

இப்போது அந்த மாநிலம் பக்காத்தான் வசம் உள்ளது. சில இந்தியர் வாக்குகளைக் கவருவதற்கான அரசியல் விளையாட்டில் அவர்கள் அந்தத் திட்டத்தை இப்போது ஆட்சேபிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக மஇகா-வும் பிஎன் -னும் அமைதியாக இருந்தன. ஆனால் இப்போது மாநில அரசு அதனை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோருவது போல நாடகமாடுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட அந்தத் திட்டத்தை மாநிலம் ரத்துச் செய்ய முடியாது என்பது அவற்றுக்கு நன்கு தெரியும்.

அடையாளம் இல்லாதவன் #19098644: கோகிலனைப் போன்று கெராக்கானைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்அல்லது மசீச அல்லது அம்னோவை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. 2007ம் ஆண்டு திட்ட அனுமதி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

MOS 2008 மே மாதம் அனுமதி கொடுக்கப்பட்டது. பக்காத்தான் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் 2008 ஜுலை மாதம் தான் நியமிக்கப்பட்டார்கள். இடைக்காலத்தில் நடப்பு நகராட்சி மன்ற உறுப்பினர்களே கடமைகளைச் செய்து வந்தனர்.

பினாங்கிலும் அதே நிலை தான். போலியான மலைச்சாரல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக பக்காத்தான் மீது பிஎன் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியது. இறுதியில் உண்மை வெளியாகி பிஎன் காலத்தில் அந்த 36 மலைச் சாரல் திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டது அம்பலமானது.

இப்போது அவர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றனர். 300 பேர் மட்டுமே அந்த எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தனர். அவர்களில் முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவும் ஒருவர்.

கம்போங் புவா பாலாவைப் பொறுத்தவரையில் அந்த நிலத்தை பிஎன் மேம்பாட்டாளர் ஒருவருக்கு ஒரு சதுர அடி 10 ரிங்கிட் என்ற விலைக்கு பிஎன் விற்று விட்டது. ஆடம்பர அடுக்குமாடி வீட்டுத் திட்டம் பிஎன் ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்காத்தான் அரசாங்கத்துக்கு எதிராக ஆட்சேபம் செய்யுமாறு மஇகா மக்களைத் தூண்டி விட்டது. ஐந்து குடியிருப்பாளர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. எஞ்சிய 23 பேர் இப்போது இரண்டு மாடி வரிசை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே நீங்கள் பிஎன் தலைவர்களை நம்புவீர்களா அல்லது பக்காத்தான் தலைவர்களை நம்புவீர்களா ?

 

TAGS: