இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா

இந்திய மத்திய அமைச்சரவை, நாளை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர், எஸ்.எம். கிருஷ்ணா, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, நேற்று மதியம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், தற்போது சூழ்நிலை சாதகமாக இல்லாததால், நாளைய அமைச்சரவை மாற்றத்தில் ராகுல் இடம் பெறமாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

‘மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்’ என கடந்த ஒரு மாதமாகவே, செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனாலும், மாற்றம் நிகழ்ந்தபாடில்லை. இந்நிலையில், ‘அமைச்சரவை மாற்றம், நாளை கண் டிப்பாக இருக்கும்’ என காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அப்படி நிகழ்ந்தால், நாளை காலை ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும். வழக்கமாக மதியத்துக்கு மேல் அல்லது மாலையில் தான் பதவியேற்பு விழா நடக்கும்.

நாளை மாலை, ஜனாதிபதி மாளிகையில், வங்கதேச பிரதமரை விருந்தினராக அழைத்து பிரணாப் முகர்ஜி கவுரவிக்க உள்ளார். ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதால் அமைச்சர்கள் பதவியேற்பு விழா காலையிலேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: