பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தில் முழுக்க முழுக்க பிஎன் கைரேகைகள்

“அம்னோ பொய் சொல்வது மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. இந்தியர்களே மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

சர்ச்சைக்குரிய கொண்டோ திட்டத்தை பிஎன் அங்கீகரித்ததை ஆவணங்கள் காட்டுகின்றன

சின்ன அரக்கன்: 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்த போது செலாயாங் நகராட்சி மன்றம் கட்டுமானத் திட்டங்களை அங்கீகரித்துள்ளது இப்போது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது.

இந்தியர்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு பிஎன் எப்படி அப்பட்டமாக அந்த விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசுவதையும் சிலாங்கூர் பக்காத்தான் அரசாங்கத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயலுவதையும்  இந்திய சமூகம் உணரும் என நான் நம்புகிறேன்.

இந்திய பிஎன் பேராளர்கள் அனைவருமே முழுக்க முழுக்க கறை படிந்தவர்கள். அவர்களை 13வது பொதுத் தேர்தலில் முற்றாக வெளியேற்றுவதே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையாகும். அவர்கள் இந்திய சமூகத்துக்கு அவமானமாகும்.

மாற்றம்: கொஞ்சம் கூட கௌரவம் இல்லாமல் அப்பட்டமான பொய்களைச் சொல்லும் முன்னாள் செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினரும் நடப்பு வெளியுறவுத் துணை அமைச்சருமான ஏ கோகிலன் பிள்ளையும்  ஸ்ரீ மகா மாரியம்மன் பத்துமலை குழுத் தலைவர் ஆர் நடராஜாவும் வெட்கப்பட வேண்டும்.

ஒரு பாவமும் செய்யாத தரப்பின் கண்களைக் குத்துவதின் மூலம் பக்காத்தான் அரசாங்கத்தின் மீது பழி போட அவர்கள் முயலுகின்றனர். ஆனால் தங்கள் கண்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் 29 மாடி அளவிலான மாபெரும் விளம்பரப் பலகை அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒடின்:  கோகிலன் அவர்களே, ” அதன் (கட்டுமான அனுமதிக்கான) நிபந்தனைகள் அடிப்படையானவை. அது எத்தனை மாடிகள் என்றும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும்  சொல்லவில்லை,’ என நீங்கள் சொன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்பது உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது நீங்கள் வெறுக்கப்பட வேண்டிய பொய்யராக இருக்க வேண்டும். ஆனால் பிஎன் பேராளர்களாகிய உங்களுக்கு அது ஒன்றும் புதிதல்ல.

தாசின்: எல்லா மலைசாரல் அல்லது அவற்றுக்கு அருகில் உள்ள எல்லா மேம்பாடுகளும் சுற்றுச்சூழல் தாக்கம் மீதான மதிப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். அந்தத் துறை கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் வருகின்றது

அத்துடன் அந்த மேம்பாட்டில் அருகில் உள்ள பாரம்பரியத் தலம் ஒன்றும் உள்ளது. எதிர்காலத்தில் அந்தக் குகைக்கு அல்லது பத்துமலைக்கு சேதம் ஏதும் ஏற்படுமானால் சுற்றுச்சூழல் ஆலோசகர், மேம்பாட்டாளர், கூட்டரசு அரசாங்கம் ஆகிய தரப்புக்களே பொறுப்பேற்க வேண்டும்.

கிட் பி: 2008ம் ஆண்டு வரையில் பிஎன் நிர்வாக முறைகேடுகளில் அதுவும் ஒன்று எனத் தெரிகிறது. என்றாலும் நடப்பு சிலாங்கூர் நிர்வாகம் என்னும் முறையில் பக்காத்தான் அந்தத் திட்டத்தைத் தீவிரமாக ஆராய்ந்து நிறுத்த முயல வேண்டும்.

சமூகவாத எதிர்ப்பாளன்: எந்தத் தரப்பும் தீர்வு காணாமல் மற்றவர் மீது பழி சுமத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

முருகப் பெருமானை மறைக்கப் போகும் அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் திட்டத்தை நிறுத்த ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகின்றீர்கள் ?

வீரா: தாம் நகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த போது என்ன நடக்கிறது என்பது கோகிலன் பிள்ளைக்கு தெரிந்திருக்காது என்றே நான் எண்ணுகிறேன். அவர் ஊழல் மலிந்த அம்னோவின் ரப்பர் முத்திரைதான்.

லிம் சொங் லியோங்: அம்னோ பொய் சொல்வது மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. இந்தியர்களே மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்றாலும் பலர் அந்த மஇகா எஜமானர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவர்களை வணங்குகின்றனர்.

அபாசிர்: அந்தத் திட்டத்தை பிஎன் அமைதியாக அங்கீகரித்துள்ள விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடுத்தது அந்த மேம்பாட்டில் எத்தனை கோயில் குழு உறுப்பினர்களும் மஇகா உறுப்பினர்களும் வீடுகளுக்குப் பதிந்து கொண்டுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பெர்ட்: மசீச தலாம் பிரச்னையைப் பயன்படுத்தி சிலாங்கூர் அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்த முயலுகின்றது. அடுத்து ‘ஹுடுட்டை’ முன்னெடுத்து மக்களை பிளவுபடுத்த தன்னால் முடிந்ததைச் செய்கின்றது.

இப்போது மஇகாவும் அதன் சேவகர்களும் பத்துமலை கொண்டோ விவகாரத்தைப் பயன்படுத்தி சிலாங்கூர் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த முயலுகின்றன.

13வது பொதுத் தேர்தலில் நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதே அதன் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள நாம் பெரிய ஆய்வாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மலேசிய இனம்: பிஎன் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட மேம்பாட்டு அனுமதியின் பிரதியை பெரிதாக்கி கோவில் வாசலில் காட்சிக்கு வையுங்கள். அந்தக் கட்டுமானத் திட்டத்தை அங்கீகரித்த குழுவில் இருந்த பிஎன் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பெயர்களையும் படங்களையும் அதனுடன் இணைக்கவும்.

 

TAGS: