விளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது


விளையாட்டுத்துறையில் வெற்றியை ஊக்குவிக்க மலேசியா பெரும்பணம் செலவிடுகிறது

இவ்வாண்டு முற்பகுதியில் லண்டனில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவது மீண்டும் மயிரிழையில் தப்பிப்போனதை அடுத்து மலேசியா விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க 2013-இல் ரிம 187.2 மில்லியன் செலவிடத் திட்டமிட்டுள்ளது.

“அதிகம் செலவிடுவது பெரிதல்ல. ஆனால், செலவிடும் பணம் விளையாட்டுத் துறையில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்”, என்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் அஹ்மட் சபரி சிக் கூறியதாக த ஸ்டார் நாளேடு அறிவித்துள்ளது.

முந்திய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் தொகை அடுத்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரிம8.5 மில்லியன் ஈராண்டுக்கொரு முறை 21-வயதுக்குக் குறைந்த விளையாட்டாளர்களுக்காக நடத்தப்படும் மலேசிய விளையாட்டுகளுக்குச் செலவிடப்படும். அவ்விளையாட்டுகள் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலையில் கோலாலும்பூரில் நடைபெறும்.

விளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதன்வழி எதிர்வரும் தேர்தலில் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

-ராய்ட்டர்ஸ்

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: