ஊழலைத் தவிர்ப்பது மீது எம்ஏசிசி-யும் ஏஜி அலுவலகமும் எம்பி-க்களுக்குப் பயிற்சி அளிக்கும்

ஊழலைத் தவிர்ப்பது மீதான பயிற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டு  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் நடத்தவிருக்கின்றன.

அந்தத் தகவலை பெமாண்டு இயக்குநர் டி ரவீந்திரன் வெளியிட்டார்.

“அரசாங்க உருமாற்றத் திட்டம் 2.0க்கு (ஜிடிபி 2.0) உண்மையில் எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகமட், ஏஜி அப்துல் கனி பட்டெய்ல் ஆகியோர் கடப்பாடு கொண்டுள்ளனர். அவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் அத்தகைய பயிற்சியை கொடுக்க வேண்டும்.”

“ஆகவே எது எடுத்துக் கொள்வதற்குச் சரி எது எடுத்துக் கொள்வதற்குச் சரி அல்ல என்பது மீது நாங்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதன் முறையாகக் கற்றுக் கொடுக்கவிருக்கிறோம்,” என  ரவீந்திரன் பெட்டாலிங் ஜெயாவில் ஊழல் எண்ணம் மீதான குறியீடு அறிவிக்கப்பட்ட நிகழ்வின் போது கூறினார்.

 

TAGS: