‘டாத்தாரான் ஆக்கிரமிப்பு’ மாணவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

studentகடந்த ஏப்ரல் மாதம் மாணவர் இயக்கம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (DBKL) அதிகாரி ஒருவர் தமது கடமைகளை செய்வதற்குத் தடையாக இருந்ததற்காக ‘டாத்தாரான் ஆக்கிரமிப்பு’ மாணவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மாணவர் போராளியான முகமட் பாஹ்மி ரெஸா முகமட் ஸாரின் என்பவரை முகமட் மஸ்ரான் மாமாட் என்ற அந்த டிபிகேஎல் அதிகாரி ‘கைது செய்து கொண்டு செல்வதற்கு’ தடையாக இருந்ததாக குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் உமார் முகமட் அஸ்மி என்ற மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஏப்ரல் 22ம் தேதி காலை எட்டு மணி வாக்கில் கோலாலம்பூரில் உள்ள டாத்தாரான் மெர்தேக்காவில் அமைக்கப்பட்டிருந்த எதிர்ப்பு முகாம் மீது டிபிகேஎல் திடீர் சோதனை நடத்திய போது அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.

பிடிபிடிஎன் என்ற மாணவர் கல்விக் கடனுதவித் திட்டம் நியாயமற்றது எனக் கூறிக் கொண்டுஅதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாணவர் போராளிகள்  வரலாற்றுச் சிறப்புடைய டாத்தாரான் மெர்தேக்காவில் முகாம் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர்.

TAGS: