நஸ்ரி: இசி பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை

1ecபலரும் நினைப்பதுபோல், தேர்தல் ஆணைய (இசி)த்தின் பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.

இசி ஆணையர்களைப் பிரதமர் நியமனம் செய்வதில்லை.

1ec1“பேரரசர் மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்தபின்னர் இசி உறுப்பினர்களை நியமனம் செய்வதாக அரசமைப்பு கூறுகிறது. அதில் பிரதமரின் பங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை”. இன்று, கோலாலும்பூரில் 13வது பொதுத் தேர்தல்மீதான பன்னாட்டு மாநாடு ஒன்றில் நஸ்ரி இவ்வாறு கூறினார்.

எட்டாண்டுகள் இசியின் நடவடிக்கையைக் கவனித்து வந்துள்ள அமைச்சர் என்ற முறையில் தாம் அறிந்தவரை பிரதமர் அதன் பணிகளில் தலையிட்டதில்லை என்றாரவர்.

TAGS: