பெருமை அல்ல… கடமை! – நெகிழவைக்கும் ஜீவா!

actor_jeevaசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி என்பவரின் மகன் தினேஷின் முழூ படிப்பு செலவையும் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏழை மாணவர்களின் படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் செய்து வரும் நடிகர் ஜீவா, சென்ற வருடம் ராஜபாண்டி என்ற நரிக்குறவ மாணவனை தத்தெடுத்து அவனது முழு படிப்பு செலவையும் ஏற்று டாக்டருக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தண்டபானி என்ற ஏழை ஆட்டோ ஓட்டுநரின் மகன் தினேஷ் கால்நடை மருத்துவத்துக்கு படித்து வருகிறார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் இவரால் இவரது மகன் தினேஷ் படிப்பை மேற்கொண்டு தொடரவில்லை. இதைக் கேள்விபட்ட நடிகர் ஜீவா ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணியின் மகன் தினேஷின் முழூ படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டு முதல் கட்ட உதவியாக 50,000இந்திய ரூபாயை வழங்கினார்.

பொதுவாக ஒருகை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள். நான் நடிகனாக இருப்பதால் என்னைப் பார்த்து மற்றவர்களும் முன் வருவார்கள் என்றுதான் செய்தியாளர்களிடம் கூட சொல்கிறேன்” என்கிறார் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா.