முஹைடின்: பக்காத்தான் முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பது ஒரு தந்திரம்

pakatanபக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை பெரும் எண்ணிக்கையில் அறிவிப்பது,  உட்பூசலுக்கான அறிகுறி என பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின் சொல்கிறார்.

வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களை அறிந்து கொள்ள அனுமதிக்கும் நோக்கத்துடன் அவ்வாறு
செய்யப்படவில்லை எனக் கூறிய அவர்,  மற்ற கட்சிகளை  மடக்கி, குறிப்பிட்ட ஒரு தொகுதியில்  போட்டியிட தங்களுக்கு உள்ள உரிமையை நிலை நாட்டுவதே அதன் குறிக்கோள் என்றார்.

எடுத்துக்காட்டுக்கு அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியைச் சுட்டிக் காட்டிய முஹைடின், அங்கு
பிகேஆர் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தது  டிஏபி-க்கு எரிச்சலை கொடுத்துள்ளது என்றார்.

“இதில் வேட்பாளருடைய அடையாளத்தை அவை வாக்காளர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க
விரும்புகின்றன என்ற கேள்வியே எழவில்லை,” என முஹைடின் மேலும் தெரிவித்தார்.

வேட்பாளர்களை முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் எண்ணுகிறார். ஏனெனில்
காலப் போக்கில் அந்தத் தகவல் பொது மக்களுக்குத் தெரிந்து விடும் என்றார் முஹைடின்.

 

TAGS: