‘இனவாத டிஏபி-யை’ நிராகரியுங்கள் என முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களுக்குச் சொல்கிறார்

பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின், ‘இனவாத, பிரிவினைவாத, ஆணவப் போக்குடையது’ என தாம் வருணிக்கும் டிஏபி அரசியலை நிராகரிக்குமாறு கேலாங் பாத்தா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

“கேலாங் பாத்தா மக்கள் அனைவருக்கும் லிம் கிட் சியாங்-கை தெரியும். நமக்கு அவருடைய வரலாறு தெரியும்.  அவர் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அங்கும் இங்கும் மாறிக் கொண்டிருப்பதை விரும்புகின்றவர்.  அவர் தமது தொகுதிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதில்லை.”

“அத்துடன் ஜோகூர் மக்கள் குறிப்பாக கேலாங் பாத்தா மக்கள், டிஏபி பின்பற்றுகின்ற ‘இனவாத, பிரிவினைவாத,  ஆணவப் போக்குடைய’ அரசியலை நன்கு அறிவர்.”

“அது, எல்லா இன மக்களும் ஒன்றாக வேலை செய்து பொறாமை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜோகூர் பழக்கத்திற்கு ஏற்ப அமையவில்லை. அதனால் தான் மலேசியாவில் ஜோகூர் சீனர்கள் தாம் மிகவும் முன்னேறியவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். அது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும்,” என்றார் முஹைடின்.

ஜோகூர் பாருவில் இன்று பிற்பகல் 6,000க்கும் மேற்பட்ட சீன பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசிய போது அவ்வாறு கூறினார்.

 

TAGS: