1.3 பில்லியன் ரிங்கிட் திட்டம் கொடுக்கப்பட்டது மீது பிகேஆர் கேள்வி எழுப்புகின்றது

rafiziபேராக்கில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிடும் பிஎன் வேட்பாளர்களில் ஒருவரும் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினருமான ஒருவருக்கு கல்வி அமைப்பு ஒன்றைக் கட்டி பராமரிப்பதற்கு உதவும் 1.3 பில்லியன் ரிங்கிட் பெறும் திட்டம் கூட்டரசு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது பற்றி பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பிஎன் வேட்பாளர்களுடைய நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது என பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராபிஸி சொன்னார்.

பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றுக்கும் நடப்பு உறுப்பினருடைய சட்ட நிறுவனத்துக்கும் கூட்டாக அந்தத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது புர்சா மலேசியா பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டியது. அவருடைய நிறுவனத்துக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஒன்றின் வழியாக 49 விழுக்காடு சிறுபான்மைப் பங்கைப் பெற்றுள்ளது.

“அந்தக் கல்வி அமைப்பின் கட்டுமானத்துக்கு 285 மில்லியன் ரிங்கிட் செலவாகும். ஆனால் அந்த கல்வி அமைப்பை கட்டி 23 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் சலுகை சிறப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 1.3 பில்லியன் ரிங்கிட் ஆகும்.”

“சட்ட நிறுவனத்துக்கு கட்டுமானத் திட்டம் கொடுக்கப்பட்டது பற்றி நான் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் அது தீவிரமான கட்டுமான நிறுவனம் அல்ல. அத்துடன் அதற்கு நல்ல பின்னணியும் இல்லை,” என ராபிஸி கூறிக் கொண்டார்.

TAGS: