இடது கை விளம்பரம் தேவைதானா?

1 Malaysia Billboard Ridicules Indian Cultureதேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் தமிழ்மொழி சிதைக்கபட்ட விடயமே இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழனின் பண்பாடும், நாகரிகமும் அவமானப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

உலகத்திற்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவன் தமிழன் என நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், அவன் இடது கை (பீச்சாங் கை)-யால் உணவு உண்பதுபோல் படத்தை பெரிதாக பதாகையில் அச்சிட்டு தேசிய முன்னணி, தமிழன் பண்பாடு, நாகரிகத்தைக் கேள்விக் குறியாக்கி, அவமானப்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணி பதாகைகளில் இடது கையால் இந்திய முதியவர் ஒருவர் உணவு உண்ணும் படம் அச்சிடப்பட்டுள்ளது.

sanmugamஇப்படத்தை பார்த்து கொதித்துப்போன பூச்சோங்கை சேர்ந்த பி. சண்முகம் என்பவர், உடனடியாக பிரிக்பீல்ட்ஸ் காவல்துறையில் சென்று புகார் அளித்துள்ளார். அத்துடன், காவல்துறையினரின் அறிவுரைக்கு அமைய சுற்றுலாத்துறை உட்பட சம்பந்தபட்ட அரசு துறைகளின் வாயில் கதவுகளை தட்டி புகார் செய்து தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

தனியொருவராக சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளின் பணிமனைகளுக்குச் சென்று அவர்களிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்த சண்முகம், தேசிய முன்னணியின் பாதகைகளின் பயன்படுத்தப்பட்டுள்ள ‘இடது கை விளம்பரம்’ தன்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் இழிவுபடுத்தி காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழையும் தமிழனின் பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையிலான அனைத்துப் பதாகைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக அகற்றவேண்டும். அதுவரை தாம் ஓயப்போவதில்லையெனவும் சண்முகம் செம்பருத்தி இணையத்தளத்திடம் கூறினார்.

தேர்தல் காலங்களில் ஆதரவு கொடுங்கள் என இந்தியர்களை தேடி வரும் தேசிய முன்னணி, 55 வருடங்களாக தொடர்ந்து இந்தியர்களை ஏதோ ஒரு வைகயில் இழிவுபடுத்தி வருகிறது.

ஆட்சியில்லாத இந்த சூழ்நிலையிலே இவ்வாறு இந்திய சமுதாயத்தை இழிவுபடுத்தும் தேசிய முன்னணி, நாளை பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தால் நம்மை இன்னும் இழிவுபடுத்தமாட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு நாம் அனைவரும் ஒரு முடிவு கட்டவேண்டும் என்று சண்முகம் தெரிவித்தார்.

TAGS: