பக்காத்தானுக்கு இந்தியர் ஆதரவு குறைவாக உள்ளது என யூனிசெல் கருத்துக் கணிப்பு சொல்கிறது

indiansபிஎன் -னுக்கு இந்தியர் ஆதரவு கூடியிருப்பதாக சொல்லப்படுவதை அண்மையில் யூனிசெல் எனப்படும்  Universiti Selangor நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது.

பக்காத்தான் ராக்யாட்டுக்கான மலாய்க்காரர் சீனர் ஆதரவு கூடியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படும்  வேளையில் இந்திய சமூகத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது.

சிலாங்கூரைச் சேர்ந்தவர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பேட்டி காணப்பட்ட சீனர்களில் 69 விழுக்காட்டினரும் மலாய்க்காரர்களில் 61.6 விழுக்காட்டினரும் மலேசியாவில் மிகவும் பணக்கார மாநிலமான சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்ளும் எனக் கருதுகின்றனர்.

என்றாலும் பக்காத்தான் அந்த மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ளும் என பேட்டி காணப்பட்ட இந்தியர்களில்
50 விழுக்காட்டினர் மட்டுமே நம்புகின்றனர்.

சிலாங்கூர் மக்களிடையே பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான நம்பிக்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளும் அந்தப் போக்கை உறுதி செய்துள்ளன.

மலாய்க்காரர்களில் 51.2 விழுக்காட்டினரும் சீனர்களில் 34.5 விழுக்காட்டினரும் நஜிப்பை ஏற்றுக் கொண்ட வேளையில் இந்தியர்களில் 71.6 விழுக்காட்டினர் நஜிப்பின் தலைமைத்துவப் பண்புகள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் மொத்தம் 1,015 பேர்களிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.