போலீஸ் பணியில் தலையிட வேண்டாம் என ஸாஹிட்டுக்கு ஆலோசனை

Rafiziபோலீஸ் பணியில் ‘தலையிட வேண்டாம்’ என பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயில் உள்துறை  அமைச்சர் ராபிஸி இஸ்மாயிலுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.

பேரணிகளில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸாஹிட் எச்சரித்ததைத்
தொடர்ந்து ராபிஸி அவ்வாறு சொன்னார்.

Rafizi1ஸாஹிட் ‘எல்லை மீறக் கூடாது’ எனக் குறிப்பிட்ட ராபிஸி, பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்துள்ள பேரணிகளுக்கு போலீசார் ‘ஒத்துழைப்பு’ அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்தகைய அச்சுறுத்தல்கள் இனிமேலும் வேலை செய்யாது. ஒரு வேளை ஸாஹிட் தம்மைப் போன்று எல்லோரையும் நினைக்கின்றார் போலும்,” என அவர் சொன்னார்.

1998ம் ஆண்டு ரிபார்மஸி இயக்கத்திலிருந்து ஸாஹிட் வெளியேறியதையே ராபிஸி அவ்வாறு  குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பேரணிகளில் கலந்து கொள்வோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த ஸாஹிட், பக்காத்தான் பேரணிகளை குறிப்பிடுகின்றாரா அல்லது அரசாங்க எதிர்ப்பு அரசு சாரா அமைப்புக்கள் திட்டமிடும் சாலை ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை.