தேர்தல் வழக்குகளில் பேராக் பக்காத்தானுக்காக ஸ்ரீராம் ஆஜராகிறார்

sriramபேராக் பக்காத்தான் தேர்தல் மோசடி தொடர்பில் தொடுக்கும் வழக்குகளில் முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் பக்காத்தான் ராக்யாடுக்காக வாதாடுவார் என்ற செய்தி வழக்குரைஞர் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி ஸ்ரீராம், 69,  2010 பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து பணி ஓய்வுபெற்றார். நீதிபதியாவதற்குமுன் அவர் வழக்குரைஞராகத்தான் இருந்தார். வழக்குரைஞராக இருந்த அவர் நேரடியாகவே முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2009-இல் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் அளித்த தீர்ப்புகள் பிரபலமானவை. இன்றும் மேற்கோள் காட்டப்படுபவை.

hanipa pasபேராக்கில் பக்காத்தான் தொடுக்கும் தேர்தல் வழக்குகளில் ஸ்ரீராம் வாதாடுவார் என்பதை பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் முகம்மட் ஹனிபா (வலம்)  மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

பாஸ், பாசிர் பாஞ்சாங், மஞ்சோய், லுபுக் மெர்பாவ், ருங்குப், செலாமா, மானோங் ஆகிய தொகுதிகளில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக தேர்தல் முறையீட்டு மனு கொடுத்துள்ளது.

பக்காத்தான் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி தொடர்பில் ஒரே ஒரு தேர்தல் மனுவைப் பதிவு செய்துள்ளது.

இந்த முறையீட்டில் பக்காத்தான் வெற்றி பெற்றால் பேராக்கில் அரசாங்கமே மாறிவிடும்.

 

TAGS: