மணிவண்ணன்… ஒரு மகத்தான மக்கள் கலைஞன்!

manivannanகலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன்.

எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருந்தது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய படம்தான் அமைதிப்படை 2.

அரசியல் கழிசடைகளை மீண்டும் அம்பலப்படுத்தியதோடு, இந்த நாட்டின் இயற்கை வளங்கள் எப்படிக் கொள்ளை போகின்றன என்பதை மிக எளிமையாக உலகுக்குக் காட்டியிருந்தார். இது அவருக்கு 50வது படம்.

தமிழகத்தில் ஈழப் போராட்டங்களுக்கு அடிகோலிய மாமனிதர்!- மணிவண்ணனுக்கு புலிகள் அஞ்சலி

manivannanஈழப் போராட்டம் தமிழகத்தில் முழுவீச்சில் நடக்க அடிகோலிய மாமனிதர் மணிவண்ணன் என்று விடுதலைப் புலிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது. இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர்.

ஈழப் போராட்டத்தோடு திரு மணிவண்ணன் அவர்களின் தொடர்பும் பங்களிப்பும் அளப்பெரியது. எமது தாயகத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது போராட்டத்தோடும் எமது மக்களோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர்.

எமது போராட்டம் தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்த திரு. மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் ஈழப்போராட்டச் செயற்பாடுகள் பலவற்றுக்கு அடிகோலியவர்.

TAGS: