‘சீனர்களுக்குப் பிரதமர் பதவியில் ஆசை இல்லை’

puaமலேசிய சீனர்கள் பிரதமராவதற்கு நாட்டம் கொள்ளவில்லை என பெட்டாலிங்  ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.

மாறாக மலேசியச் சீனர்கள் தங்களை முதலில் மலேசியர்களாகக் கருதுகின்றனர் என்றும் இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய நலன்களில்  அக்கறை கொண்டுள்ள எந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பிரதமராக ஏற்றுக்  கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

மலேசிய சீனர்கள் தீவிர இனவாதச் சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என்றும்  அவர்கள்  அந்த ‘இனவாத சிந்தனையை’ கை விட்டால் சீன வமசாவளியைச் சேர்ந்த ஒருவர்  மலேசியாவுக்கு பிரதமராக முடியும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான்  காசிம் கூறியுள்ளது பற்றி புவா கருத்துரைத்தார்.

மலேசிய சீனர்களுக்கு எதிரான அந்த தவறான கருத்துக்கள் வேண்டுமென்றோ  அல்லது இல்லாமலோ பரப்பப்படுவதாக அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

 

TAGS: