மஇகா தலைமையகக்தின் முன்பு மெட்ரிகுலேசன் மாணவர்கள் மறியல்

-அ. திருவேங்கடம், ஜூன் 20, 2013.

மெட்ரிகுலேசன் துறையினர் நிர்ணயித்துள்ள அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன்மடங்கு சிறப்புmic-logo கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருக்கும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் புதன்கிழைமை துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனை சந்தித்து ஒரு மணி நேரம் எங்கள் கல்விக் குழுவினர்  பேச்சு வார்த்தை நடத்தினோம். இவ்வரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் கல்வியில் பாகுபாடு காட்டுகின்றது என்பதை பவர் பொய்ண்ட் உதவியுடன் விளக்கினோம்.

இதற்கிடையே  இடம் கிடைக்காத மாணவர்களின் பட்டியலைத் தொகுக்கும் கூட்டு முயற்சி கமலநாதன் அலுவலகத்திற்கும் எங்கள் குழுவினருக்கும் இடையே 4  நாள்கள்  நடந்தது. இக்கூட்டு முயற்சியின் வழி நாடு முழுதும் உள்ள 324 மாணவர்களின் முழு விவரங்களைத் தொகுத்தோம். இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதன் நோக்கத்தையும்  கடந்த திங்கள்கிழைமை சந்திப்பில் அமைச்சர் சுப்பிரமணியத்திடம் நான் எடுத்துக்  கூறினேன்.

19-6-2013, புதன்கிழைமை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் இப்பட்டியலைப் பயன் படுத்தி பேச வேண்டும் என அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சரிடம் நான் கேட்டுக் கொண்டேன். கடந்த செவ்வாய் இரவு 10 மணி அளவில்  முழுமையாக்கப்பட்ட அந்தப்  பட்டியல் அமைச்சர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த புதன்கிழைமை  நடந்த அமைச்சவைக் கூட்டத்தில் தாம் அமைச்சர் இட்ரிஸ் ஜூசோவிடம் இப்பிரச்சனையை  விரைவாக கவனிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக மட்டும் அமைச்சர் கூறினார்.

ஒரு மாதப் படிப்பு முடிந்து விட்ட நிலையில் இந்திய மாணவர்களின் நிலை தொட்டு மஇகா உட்பட எந்தத் தலைவருக்கும் முழு  அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. எங்களிடம் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் எனது முகநூலில் ஏதும் நல்ல செய்தி வருமா என பார்ப்பதில் குறியாக இருக்கின்றனர்.

இந்த நிச்சயமற்ற நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமைக் காலை மணி 10.00 அளவில் கோலாலம்பூரில் அமைத்துள்ள  மஇகா தலைமையகக் கட்டடம் முன்பு  மாணவர்கள் மறியல் செய்வது என எங்களுடன் பல பெற்றோர்கள் கூடி முடிவெடுத்தனர்.

Athiruமறியல் கூட்டத்தில் மற்றத்  துறை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஏனைய பொது மக்களும் கலந்து கொண்டு  நமது சமுதாய மாணவர்களின் கல்வித் தேவைகளை முழுமையாக  அரசு பூர்த்தி செய்ய  வேண்டும் எனக்  கேட்டுக்கொள்ளும் பரிந்துரையில் கையெழுத்திட்டு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் இவ்வாண்டு எஸ்பிஎம் எழுதும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேண்டும். அடுத்தாண்டும் இதே போன்ற இழுபறி நடக்காமல் இருக்க அவர்களின் ஒத்துழைப்பும் எங்களுக்குத்  தேவை. எனது முக நூல் : thiruvenggadam anamuthu

 மசீச தலைமையகம் வரையில் ஊர்வலம்

எங்கள் பட்டியலில் நான்கு சீன மாணவர்களும் இருப்பதால் சுமார் பிற்பகல் மணி  12 30க்கு விரும்பும் பெற்றோர்களுடன் நமது குழுவினர் மஇகா கட்டடத்திலிருந்து மசீச கட்டடம் வரையிலும் ஊர்வலமாகச் செல்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு கட்டடங்களிலும் முறையே மஇகா,மசீச கட்சித் தலைவர்கள் எங்கள் மனுவை பெற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றோம்.