முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை வாதாட அனுமதியுங்கள்!

3168100f1f574958949150bdee353cc5முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை ஷரியா நீதிமன்றத்தில வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் கா. ஆறுமுகம்.

கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்  என மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் கூறுயுள்ளது.

Arumugam_Suaramஇது சார்பாக கருத்துரைத்த சுவராம் தலைவர் கா. ஆறுமுகம், “நாட்டின் அரசமைபு சட்ட்த்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் ஏற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

விக்டோரியா ஜெயசிலி மார்ட்டின் (வயது 51) ஷரியா சட்டம் பயின்றவர். 2011-இல் ஷரியா நீதிமன்றத்தில் தான் ஆஜராகுவதை, 1993 ஷரியா வழக்கறிஞர் விதிமுறைகள், தடை செய்வது சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்தார்.

அதில் அந்த விதிமுறைகள் கூட்டரசு அரசமைப்பு சட்டவிதிகள் 5, 8 மற்றும் 10 ஆகியவற்றுக்கு முரண்பாடானவை என்ற வாதத்தை வைத்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரின் வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அவர் செய்த மேல்முறையீட்டில் தற்போது வெற்றி கண்டுள்ளார்.

islam1இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம். மதமாற்றத்தினால் பல வகையான பிரச்சனைகளை இஸ்லாம் அல்லாத குடும்பத்தினர்கள் ஆளாகிறார்கள். உதாரணமாக கணவன் அல்லது மனைவி என்று ஒருவர் மதம் மாறினால் இன்னொருவரும் அவர்களது குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள்.

இது சார்பான வழக்கை ஷரியா நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய முடியும். இதில் சிக்கல் என்னவென்றால் முஸ்லிமாக உள்ளவர் மட்டுமே ஷரியா நீதி மன்றத்தில் ஆஜராக முடியும். இந்துவாக உள்ள ஒருவருக்கு உரிமை கேட்டு போரட முஸ்லீம் ஷரியா வழக்கறிஞர்கள் எளிதாக் முன்வருவதில்லை என்கிறார் ஆறுமுகம்.

“பெயர் மாற்றம் சார்பாக ஈப்போவில் ஒரு ஷரியா வழக்கறிஞரை தேட ஆறுமாதம் ஆனது” என்கிறார் சல்பியா என்ற சுமதி (உண்மை பெயர் அல்ல). “கேஸ் கொடுத்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் சாதகமான தீர்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை” என்கிறார்.

[செய்தி : பிரசன்னா, செம்பருத்தி.காம்]

TAGS: