மெட்ரிகுலேசன் மாணவர் பட்டியலைக் காட்டுங்கள்: பெற்றோர்கள் ஜெயாவிற்கு மீண்டும் படையெடுப்பு

-அ. திருவேங்கடம், ஜூன் 27, 2013.

நாடளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் 1500 இந்திய மாணவருக்கு இடம் கொடுத்து விட்டோம் என்னும்A-Thiruvengadam பதில்ஆச்சரியமளிக்கவில்லை.இவரின் இந்த பதிலை அச்சடித்தாற் போல் ஏற்கெனெவே துணைக்  கல்வி அமைச்சர் கமலநாதன் மூன்று  அறிக்கைகள்  வெளியிட்டிருந்தார்.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழைமைகளில் கமலநாதனும், நாங்களும் அவரது உதவியாளர்களுடன் சேர்ந்து தயாரித்துக் கொடுத்த பெயர் பட்டியலைச் சேர்ந்த  330 மாணவர்களுக்கு இடம் பெற்றுத் தருவதாக ஊடகங்களில் வாக்குறுதி அறிக்கையை கமலநாதன்  விட்டிருந்தார்.

முகைதின் யாசின் நாடாளுமன்றத்தில் அளித்த  பதிலின் காரணத்தால் கமலநாதன் அளித்த  வாக்குறுதி நிறைவேறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

எது எப்படி இருந்தாலும் கமலநாதன் சொன்ன சொல் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த நாட்டில் தற்போதைய அரசில், உண்மையைக் கண்டறிய மாணவர் பட்டியலைக்  காட்டாமலேயே  1500 என்னும் எண்ணைச் சுட்டிக் காட்டிச்  சாதிக்க முடிகின்றது.அவ்வாறு ஆதாரம் இல்லாத தகவல்கள் நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் போது நமது மாண்புமிகுக்கள் நால்வரும்  அமைதிகாக்கின்றனர்.

ஆனால், வெளியில் நம்மைச் சந்திக்கும் போது உண்மை நிலவரத்தை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஊசி முணை அளவு கூட நமது இன உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்  என மேடையில் பேசுகின்றனர்.

உண்மை நிலையை  கடந்த 12-6-2013இல் எங்கள்  அமைப்பினருடன்  நடந்த   அவரது அலுவலகச் சந்திப்பன்று  கமலநாதன் ஒப்புக் கொண்டார். அவரது உதவியாளரும் நானும் சேர்ந்து ஒரு பட்டியலைச் தயாரித்து அதில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு இடம் பெற்றுக் கொடுப்பது என பிறகு  முடிவு செய்யப்பட்டது.

அந்தப் பட்டியலைப் பற்றி கடந்த 17-6-2013 திங்கள்கிழைமை அமைச்சர் சுப்ரமணியத்தை  சந்தித்து விளக்கம் சொன்னேன். அவருடன் நான்  இணைந்து போட்டத்  திட்டப்படி, அவர் கடந்த 19-6-2013  புதன்கிழைமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு இப்பட்டியலைக்  கொண்டு செல்ல வேண்டும். வாக்குறுதிப்படி அமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்திற்குக்  கொண்டு சென்று அமைச்சர் இட்ரிஸ் ஜுசோவிடம் பேசி உள்ளார். அன்றையக்  கூட்டத்திற்கு முகைதின் யாசின் வராததால் இட்ரிசும் எந்தச் சாதகக் கருத்தும் சொன்னதாகத் தெரியவில்லை.

ஆகக் கடைசி நிலவரப்படி மஇகா தலைவர்கள் அத்தனைப்  பேரும் இந்த மெட்ரிகுலேசன் பிரச்சினையில் ஏதும் பேசாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முகைதின் யாசினை எதிர்த்து கருத்துச் சொல்லத் துணிவில்லை.

நமது இன மாணவர் நலன், உரிமை என்பதைவிட தங்களின் அரசு பதவிகளைத் தற்காப்பதே  முக்கியம் என அவர்கள் கருதுகின்றனர்.

தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன்பு அமைச்சர் சுப்ரமணியம் 1500 இடம் பெற்றுக் கொடுப்பதாக ஊடக அறிக்கை விட்டிருந்தார். அந்த வாக்குறுதி இப்போது காற்றில் பறந்து போய்விட்டது.

பெற்றோர்களின் மனக்குமுறலை  வெளிப்படுத்த வரும் புதன் கிழைமை 3-7-2013இல் புத்ராஜெயா பிரதமர் அலுவலகம் முன்பு 1500  பெற்றோர்கள்  கூடுவர். பிரதமர்  கொடுத்த 1500 என்னும் எண்ணிக்கையை எப்படி அவர் நிறைவேற்றுவார் என்பதை அவரிடமே கேட்போம்.

நமது வருகை பிரதமர்  அலுவலகத்திற்குத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.