அழியா மை தொடர்பில் ராபிஸி மீது இசி வழக்குப் போடலாம்

1 ink13வது பொதுத் தேர்தலுக்கான  அழியா மை விநியோகிப்பாளர் தொடர்பான  குற்றச்சாட்டுக்கள் மீது பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயிலுக்கு சட்ட  நடவடிக்கை எடுப்பது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் சிந்தித்து வருகிறது.

“நோன்பு மாதத்தில் அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அவர்
விளைவுகளை எதிர்நோக்குவார்.”

அந்த அழியா மையை விநியோகம் செய்தவருடன் தமக்கும் இசி தலைவர்  அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புக்கும் அணுக்கமான உறவுகள் இருப்பதாக  நாடாளுமன்றத்தில் ராபிஸி தெரிவித்தது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக்  கொள்ளப்பட்ட போது வான் அகமட் அவ்வாறு பதில் அளித்தார்.

கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கு கொங் கெடாக் ஆகாயப் படைத் தளத்தில்  முன் கூட்டியே வாக்களிப்பு நடைபெற்றதை பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம்  பேசினார்.

ராபிஸி, பின்னர் தமது குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியிலும்  வெளியிட்டார்.

TAGS: