‘balik India, China’ எனச் சொன்னதை தலைமை ஆசிரியர் ஒப்புக் கொள்கிறார்

prakashபள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம்  ‘balik India, China’ (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச்  சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா அலாம் தொகுதித் துணைத் தலைவர் ஏ  பிரகாஷ் ராவ், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை தமது கருத்துக்காக மன்னிப்புக்  கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சொன்னார்.

அத்துடன் அந்தத் தலைமை ஆசிரியை ‘இந்தோனிசியாவுக்குத் திரும்பிச்
செல்லுமாறு” மலாய் மாணவர்களிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார்.

“வெள்ளிக் கிழமையன்று மாணவர்களைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளப்  போவதாகவும் தலைமை ஆசிரியை வாக்குறுதி அளித்துள்ளார்,” என்றும் அந்தப்  பள்ளிக்கூடத்திற்கு வருகை அளித்த பின்னர் பிரகாஷ் சொன்னார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மாணவர்கள் கூச்சல் போட்டுக்
கொண்டிருந்ததால் தலைமை ஆசிரியை ஆத்திரமடைந்து அவ்வாறு சொன்னதாக  சொல்லப்படுகின்றது.