போலீஸ் 9 வயது பள்ளிப் பிள்ளைகளை ‘மிரட்டுகின்றது’

police“போலீசார் வெட்கமே இல்லாத பள்ளிக்கூட முரடர்களாகியுள்ளனர். ஒசிபிடி  குண்டர் கும்பல்களைப் போன்ற உங்கள் அளவுள்ள ஒருவருடன் மோத  வேண்டும். 9 வயது பள்ளிப் பிள்ளைகளுடன் அல்ல”

பெற்றோர்: மாணவரை விசாரிக்கவில்லை என ஒசிபிடி சொல்வது பொய்

கிங்பிஷர்: பிள்ளைகளை கோழைத்தனமாக விசாரித்து விட்டு அதனை மறுத்துள்ள  ஒசிபிடி-யை வெட்கப்பட வைப்பதற்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அயறாமல்  முயற்சி செய்கின்றனர். அந்த ஒசிபிடியின் நடவடிக்கை அரச மலேசியப் போலீஸ்  படையின் தோற்றத்துக்கு நிச்சயம் இழுக்கைக் கொண்டு வரும்.

பெற்றோர்கள் சிவில் நடவடிக்கைக்குத் தங்கள் குறைகளைக் கொண்டு செல்வது  பற்றியும் பரிசீலிக்க வேண்டும். தேவைப்பட்டால் அச்சுறுத்தல் பற்றி சம்பந்தப்பட்ட  ஐநா அமைப்புக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

பெர்ட் தான்: அந்த 9 வயது பள்ளி மாணவி சொல்வதை நாங்கள் நம்புகிறோம்.  அந்த சுங்கை பூலோ ஒசிபிடி ஜுனாய்டி பூஜாங் சொல்வதை அல்ல.

தங்கள் பிள்ளைகள் போலீஸ் மருட்டியுள்ளதாக 10 பெற்றோர்கள் போலீசில் புகார்  செய்துள்ளனர். போலீசார் வெட்கமே இல்லாத பள்ளிக்கூட முரடர்களைப் போன்று  மாறியுள்ளனர்.

ஒசிபிடி, குண்டர் கும்பல்களைப் போன்ற உங்கள் அளவுள்ள ஒருவருடன் மோத  வேண்டும். 9 வயது பள்ளிப் பிள்ளைகளுடன் அல்ல. உண்மையில் போலீசாரின்  தோற்றம் சீரழிந்து விட்டது.

ஏரியஸ்46: பொய்களைச் சொல்வதில் இனவாத ஸ்ரீ பிரிஸ்டினா தலைமை  ஆசிரியரைக் காட்டிலும் ஒசிபிடி ஜுனாய்டி பூஜாங் உயர்ந்தவராகத் தெரியவில்லை.

ஜுனாய்டிக்கு நான் விடுக்கும் கேள்விகள் இது தான்: முகமட் நாசிருக்கு எதிராக  கொடுக்கப்பட்ட பல புகார்களின் நிலை என்ன ? மாணவர்களை நீங்கள் எந்த  விசாரணையின் கீழ் விசாரிக்கின்றீர்கள் ? பெற்றோர்கள் இல்லாமால்  மாணவர்களை விசாரிப்பது தான் போலீஸ் நடைமுறையா (SOP) ?

அந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர்  பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதை ஜுனாய்டி  நினைவில் கொள்ள வேண்டும்.  புதுப்பிக்கப்படுகின்றது என்ற போர்வையில்  கேண்டீனைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு கழிப்பறைகளுக்கு
அருகில் உள்ள குளியலறையில் உணவு உட்கொள்ளுமாறு செய்யப்பட்டது  மாணவர்களாகும்.

ஒரியோல்: குழந்தைகளுடைய உரிமைகளும் தங்கள் பிள்ளைகளுக்காக போராடும்  குடி மக்களுடைய உரிமைகளும் மறக்கப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள்  கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரிகளுக்கு எதிராக தங்கள் குறைகளைத் தெரிவிக்கின்றவர்கள்
அச்சுறுத்தப்படுகின்றனர். கல்விக் கோட்பாடுகளுக்கு அந்தப் பள்ளிக்கூடம் ஒர்  அவமானமாகும். அதன் தலைமை ஆசிரியர் நீக்கப்பட வேண்டும். இருந்தும்  அம்னோ, போலீஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் உட்பட அதிகாரிகள்  பிள்ளைகளையும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் மிரட்டுவதற்கு
ஒத்துழைப்பதாகத் தெரிகிறது.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: இந்த ஆட்சி இப்போது பிள்ளைகளை ‘மிரட்டுவதாக’  தெரிகின்றது. நாம் எந்த அளவுக்குச் செல்லப் போகிறோம் ? ‘balik China and India’ என முஸ்லிம் அல்லாத மாணவர்களிடம் சொன்னதற்காக  மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ஷா அலாம் இடைநிலைப் பள்ளி தலைமை  ஆசிரியரைப் போன்று அந்தத் தலைமை ஆசிரியரும் செய்திருந்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்.

மலாய் அரசாங்க அதிகாரி ஒருவருடைய புகார், மலாய்க்காரர் அல்லாத
பெற்றோர்களுடைய புகார்களைக் காட்டிலும் அதிக் வலிமை வாய்ந்ததாகத்  தெரிகிறது. இன மேலாண்மை, வர்க்க மேலாண்மை என்ற நிலைக்குத் தான் நாம்  வந்துள்ளோம்.

 

TAGS: