இண்ட்ராப் கூட்டத்தை கலைத்த அம்னோ ரவுடிகள்!

ரசாக்: நேற்று ‘அம்னோவை தவிர எதுவானலும் சரி’ என்ற கூட்டத்தைக் கலைத்த அம்னோ ரவுடிகள் பற்றி கோமாளி ஏன் கண்டம் செய்யவில்லை?

கோமாளி: காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கோமாளி வன்மையாக கண்டனம் செய்கிறேன்.

காந்தி படங்களை ஏந்தியும், வன்முறையைற்ற வகையில் இனவாதத்தை ஒழிக்க முற்பட்டுள்ள அமைப்புகளுடன் இணைந்து இண்ட்ராப் மேற்கொண்டுள்ள இம்முயற்சி மலாயக்காரர்களுக்கோ மலேசியாவிற்கோ எதிரானவை அல்ல. அவை பதவி அதிகாரங்களின் வழி நாட்டின் வளத்தையும் நிர்வாகத்தையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு மற்ற இனங்களின் பிரதிநிதிகளை பகடைகாய்களாக நகர்த்தி தங்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அம்னோ என்ற குறிப்பிட்ட கும்பலை எதிர்த்துத்தான்.

ரவுடிகளை ஏவி விட்டு அவர்களால் ஒரு நிகழ்வை தடைசெய்ய இயலும். ஆனால் அந்த நடைமுறையானது அம்னோவின் மீதுள்ள அதிர்ப்தியை மேலும் அதிகரிக்கும். சில மணிநேரங்கள் நடந்து பலனை அளிக்க வேண்டிய அந்த நிகழ்வு, இந்த ரவுடிகளின் அட்டகாசத்தால் பத்தே நிமிடங்களில் பலனளித்துள்ளது.

இவர்கள்தான் அம்னோ! யாருக்கு வேண்டும் இவர்கள்? ஆட்சி செய்யும் அருகதை இதில் உள்ளதா?

காணொளி | 7:33 mins