புதிய தமிழ் நாளேடு, தினக்குரல், உதயமாகிறது

ஒரு புதிய தமிழ் நாளேடு, தினக்குரல் பிப்ரவரி 9-இல் வெளியீடு காண்கிறது.

அதன் நிர்வாக இயக்குனர் அருள்குமார்,29. இவர், காலஞ்சென்ற மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதிகுமணன் அவர்களின் புதல்வராவார்.ஆதிகுமணன் பிறந்த நாளான பிப்ரவரி 9-இல், இப் புதிய நாளிதழ் வெளிவருவதாக அதன் தலைமை ஆசிரியர் பி.ஆர்.ராஜன் தெரிவித்தார்.

நாள்தோறும் 31,000 பிரதிகள் அச்சிடப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 47,000 பிரதிகள் வெளிவரும் என்றும் 34 ஆண்டுகள் இதழியல் அனுபவம் உள்ள ராஜன் கூறினார்.

இந்நாளேட்டின்  அலுவலகம், ஜாலான் ஈப்போவில் பத்து காம்ப்ளெக்சில் உள்ளது.

தினக்குரல் மலேசிய இந்திய சமூகத்தை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று ராஜன் தொலைபேசி வழி நிகழ்ந்த நேர்காணலில்  பெர்னாவிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே,நாட்டில் மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. மலேசிய நண்பன், தமிழ் நேசன், மக்கள் ஓசை. நான்காவதாக தினக்குரல் வருகிறது.