பிரதமர்: தெரு ஆர்ப்பாட்டங்கள், பிட்டத்தைக் காண்பித்தல் போன்றவை நம் கலாச்சாரமல்ல

ஆகஸ்ட் 30-ல், இளைஞர் ஒருவர் கால்சட்டையை இறக்கிப் பிட்டத்தைக் காண்பித்த சம்பவத்தைக் கண்டித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது ‘மலேசியத்தன்மை அற்றது’என்றார்.

அப்படிப்பட்ட செய்கைகள் மலேசியப் பண்பைப் பிரதிபலிப்பதில்லை என்பதால் அவற்றை ஊக்குவிக்கலாகாது என்று பிரதமர் இன்று ஒர் உரையில் குறிப்பிட்டார்.

“தெரு ஆர்ப்பாட்டங்கள் ஊக்குவிக்கத்தக்க மலேசிய கலாச்சாரமல்ல.

“அதேபொன்றதுதான் ஒருவரின் கால்சட்டைக் கழட்டிப் பிட்டத்தைக் காண்பிக்கும் செயல். அதில் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை”.

மெர்டேகாவுக்கு முன்தினம் ஜஞ்சி ஜனநாயக பேரணியில், இளைஞர் ஒருவர் தன் கால்சட்டையைக் கழற்றி நஜிப்பின் புகைப்படத்தை நோக்கிக் காண்பித்தார்.

அப்பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் டாட்டாரான் மெர்டேகாவில் திரண்டு தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

TAGS: