கேகே விமான நிலையம் இருண்டுபோனது ஏன்? விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவு

வியாழக்கிழமை கோட்டா கினாபாலு விமான நிலையத்தின் கேகேஐஏ) ஓடுபாதையில் விளக்குகள் எரியாமல்போனது ஏன் என்பதைக் கண்டறியும்படி போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா பணித்துள்ளார். விமான நிலையம் இருண்டுபோனதால் பல பயணச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. பயணிகளும் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

விசாரணையில் எதுவும் விட்டுவைக்கப்பட மாட்டாது என்று கூறிய அமைச்சர் “அதற்குப் பொறுப்பானவர்கள்”மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

“கீழறுப்பு வேலை நடந்திருப்பதாக தெரிய வந்தால் போலீசில் புகார் செய்யப்பட்டு மேல்விசாரணை செய்யும் பொறுப்பு போலீசிடமே ஒப்படைக்கப்படும்”, என்றாரவர்.

வியாழக்கிழமை ஓடுபாதை விளக்குகள் பழுதடைந்து நின்றுபோனதால் கேகேஐஏ மூடப்பட்டது.

பெர்னாமா