பிரிக்பீல்ட்ஸ் தீபாவளிச் சந்தை

உங்கள் கருத்து: “அதெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரம்- சில அமைச்சுகள் மறுக்கும், முடியாது என்று சொல்லும். அதன்பின் நீங்கள் பிரதமரிடம் முறையிடுவீர்கள் அவர் சரியென்பார்”

மனம் தளர்ந்த தீபாவளி வர்த்தகர்கள் பிரதமர் வீடுமுன் திரண்டனர்

ஆரிஸ்46: ஜாலான் துன் சம்பந்தனில் கடை வைத்திருப்பவர்களும் அங்கு வசிக்கும் கண்பார்வையற்ற மக்களும் புகார் செய்ததால், தீபாவளிச் சந்தைக்கான இடத்தை கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் மாற்றியுள்ளது..

இதனால், தீபாவளிக்காலத்தில் நடைபாதைகளை வழக்கமாக அடைத்துக்கொண்டிருக்கும் கடைகள் இல்லை. போக்குவரத்து நெரிசல் இல்லை. ஜாலான் துன் சம்பந்தன் கடைகளில் பொருள் வாங்குவதே  இனிய அனுபவமாக இருந்தது

இதற்காக, நியாயமற்ற வர்த்தகர்கள் சுயநல நோக்கில் என்னதான் மிரட்டினாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் மாநகராண்மைக் கழகத்தைப் பாராட்ட வேண்டும்.

சின்ன பெரியவன்: இதில் எந்தத் தரப்பையும் ஆதரிப்பது சிரமமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பிரிக்பீல்ட்ஸில், குறிப்பாக ஜாலான் துன் சம்பந்தனில் நெரிசல் மிகுந்துவிட்டது.

போக்குவரத்து இடர், கார் நிறுத்துமிடப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்திய வாடிக்கையாளர்கள் பொருள் வாங்க பிரிக்பீல்ட்ஸ் செல்வதை முடிந்தவரை தவிர்க்கப் பார்க்கிறார்கள்.

விழாக்காலம் வந்துவிட்டால் போதும் கடைக்காரர்களும் தற்காலிக வர்த்தகர்களும் கன்னாபின்னாவென்று கடைகளை அமைத்து விடுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்புப் பற்றியோ போக்குவரத்து பற்றியோ  கவலைப்படுவதில்லை.

இவர்கள் ஒருபுறம் என்றால், பொருள் வாங்கச் செல்வோர் வாகனங்களைக் கண்ட இடங்களில் நிறுத்தி வைப்பார்கள். போக்குவரத்து விதிகளைக் கொஞ்சமும் மதிக்க மாட்டார்கள்.இதனால் பிரீக்பீல்ட்ஸ் மோசமான இடமாக மாறியுள்ளது.

இந்நிலை தொடருமானல், பொருள் வாங்க விரும்பும் இந்தியர்கள் பிரிக்பீல்ட்ஸை ஒதுக்கப் பார்ப்பார்கள், அப்பகுதியும் ‘குட்டி இந்தியா’ என்ற தகுதியை இழக்கும் நிலை வரலாம்.

அப்சலோம்: விழாக்காலங்களில், தீபாவளியோ, ரமலானோ, சீனப்புத்தாண்டோ தெருக்கள்வரை கடைகளை நீட்டிக்கொள்ளவும் நடைபாதைகளில் கடைகள் அமைக்கவும் அனுமதிப்பது வழக்கமாகி விட்டது.

இப்போது அந்த வழக்கத்தை மாற்ற நினைக்கும்போது அதைச் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்களும் பிழைக்க வேண்டும். நடைபாதைகள் நடப்பதற்காக உள்ளவை.அங்கு கடைகள் அமைப்பது சரியல்ல. எனவே, தற்காலிகக் கடைகளுக்காக ஒதுக்கப்படும் இடத்தில்தான் அவற்றை அமைக்க வேண்டும்.

இம்முடிவை எல்லா விழாக்களுக்கும் பின்பற்ற வேண்டும். வர்த்தகம் செய்வோர் சாலைகளையும் வாகனம் நிறுத்துமிடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு கடைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது.

கீ துவான் சை: வர்த்தகர்கள் கவலைப்பட வேண்டாம். நஜிப், உங்களுக்கு உதவுவார். இப்போதெல்லாம் அதுதான் வழக்கமாக இருக்கிறது.

இதெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரம்- சில அமைச்சுகள் மறுக்கும், முடியாது என்று சொல்லும். அதன்பின் நீங்கள் பிரதமரிடம் முறையிடுவீர்கள் அவர் சரியென்பார்.

நஜிப்பின் தோற்றத்தை உயர்த்திக்காட்டவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் அது.

நியாயவான்: ஆமாம், முடிவில் இந்தியர்களின் நலனை உத்தேசித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூறுவார்கள். 13வது பொதுத் தேர்தல் நெருங்கி வருகிறதல்லவா.

மாற்றம் விரும்பி: இந்திய வர்த்தகர்கள் தங்களை இரண்டாம்தர குடிமக்கள்போல் நினைத்துக்கொள்ளக்கூடாது.

‘Kami memohon campurtangan YAB Perdana Menteri yang disayangi dan dihormati.. ‘என்பது பிச்சை கேட்பதுபோல் இருக்கிறது. ‘மக்களுக்கு முன்னுரிமை’ என்று கூறும் பிரதமரிடம் உரிமையுடன் கோரிக்கையை முன்வையுங்கள்.

அரசாங்கத்தை அணுகுவதில் தாழ்வு மனப்பான்மை கூடாது. அங்குள்ளவர்கள் உங்கள் நலனைக் காப்பதற்காக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

 

 

 

 

TAGS: