RM3 பில்லியன் நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ்.சி. போலிஸ் புகார் செய்யும்

‘துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1எம்டிபி-ஆல் எடுக்கப்பட்ட நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ். சிட்டி சென். பெர். (தி.ஆர்.எக்ஸ்.சி.) போலிஸ் புகார் செய்யவுள்ளது. நேற்று, தி.ஆர்.எக்ஸ். மேம்பாட்டுத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட RM3.07 பில்லியன், 1எம்டிபி-யால் தவறாக பயன்படுத்தப்படுவதாக, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும்…

ரொஸ்மா வாங்கிய நகைகளுக்கான நிதி எங்கிருந்து வந்தது என முன்னாள்…

தனது மனைவி ரோஸ்மா மன்சோர், நகைகள் வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வந்ததென தனக்குத் தெரியாது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். "இந்த நிதி உண்மையில் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை," என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, அந்தப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.…

அல்தாந்துயா வழக்கு தீர்க்கப்பட்ட ஒன்று, நஜிப் கூறுகிறார்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், போலீஸ் உயரடுக்கின் இரண்டு உறுப்பினர்கள் கொலை செய்த மங்கோலியப் பெண், அல்தான்துயா ஷாரிபூவைத் தனக்கு தெரியாது என மீண்டும் வலியுறுத்தினார். அல்தாந்தூயாவின் தந்தை செடேவ் ஷாரிபூ, அக்கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய அரசாங்கத்தைத் தூண்டிவரும் வேளையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நஜிப்பின்…

அல்தான்துயாவுக்குப் பிறகு, டிஏபியின் பார்வை தியோ பெங் ஹோக் வழக்கு…

2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக் மரணம் குறித்து, இன்று மாலை மூன்று மூத்த டிஏபி தலைவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தவுள்ளனர். அமைச்சர்களான, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், துணைத் தலைவர்…

அல்தான்தூயாவின் போலிஸ் அறிக்கையில், நஜிப்பின் முன்னாள் உதவியாளர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபூவுவின் கொலை வழக்கு தொடர்பான போலிஸ் விசாரணையின் புதிய அறிக்கையில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு உதவியாளராக இருந்த மூசா சஃப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்தான்துயாவின் தந்தை செடேவ் ஷாரிபூவால் அப்போலிஸ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுவரை அந்த அறிக்கையில், சந்தேக நபராக வேறு யாரும்…

அன்வார் : நிதியமைச்சர் பதவி உணர்ச்சிபூர்வமானது

பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தவறான நடத்தை மற்றும் மோசடிகளை வெளிபடுத்தும் பொறுப்பை அமைச்சர்கள் அல்லது பிற நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்படி நிதியமைச்சருக்குப் பரிந்துரைத்தார். "நான் லிம் குவான் எங்-ஐ சந்தித்து, நிதி அமைச்சரின் நிலைப்பாடு மிகுந்த உணர்ச்சிபூர்வமானது என்று கூறியிருக்கிறேன். "ஒவ்வொரு அறிக்கையும் (நிதியமைச்சரின்) நேரடியாக முதலீட்டாளர்களைக்…

அல்தாந்துயாவின் தந்தை நாளை மகாதிரைச் சந்திக்கிறார்

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தாந்துயாவின் தந்தை – சேடேவ் சாரீப்பூ – நாளை புத்ராஜெயாவில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திக்கவுள்ளார். நாளை மாலை 5 மணியளவில், பிரதமர் அலுவலகத்தில் அச்சந்திப்பு நடைபெறும் என சேடேவ்-இன் வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார். மகாதிரிடம் என்ன…

கொலைக்கான சூத்திரதாரி மிக முக்கியமானவர், அல்தாந்துயாவின் அப்பா கூறுகிறார்

கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகியின் தந்தை, சேடேவ் ஷாரிபூ, தனது மகள் அல்தாந்தூயாவைக் கொன்றதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலிஸ் கொமாண்டோ சிரூல் அஷ்சார் உமார் பற்றி கவலைப்படவில்லை என்றார். மாறாக, தனது மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டவர் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புவதாக, சேடேவ் கூறினார்.…

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள், ஜாம்பவான் கூறுகிறார்

ஒரு மாதமே ஆன புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது, தொழிலதிபர் லீ கிம் யூ அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார், குறிப்பாக நாட்டின் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை நிறுத்தும் நடவடிக்கையில். 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிஎன் நிர்வாகத்தை விமர்சித்து வந்த லீ, வெளிநாடுகளில் இருக்கும்…

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது

நாட்டின் மத்திய திறந்த சந்தைக் குழு, இந்த ஆண்டு வட்டி விகிதத்தை இரு மடங்கு அதிகரிக்க கோடிகாட்டியதன் விளைவாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 4.00-க்கு இறங்கியது. இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கியின் (இசிபி) அளவுக்கு அதிகமான ஊக்கக் குறைப்புத் திட்டத்திற்குப் பின்னர், நிச்சயமற்ற…

நாட்டின் தலைமை நீதிபதி பதவி விலகல்

துன் ராவுஸ் ஷெரீஃப், நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிய வேளை, சுல்கிஃப்ளி அகமட் மகினுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு அவர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை…

பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது. இருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன. 1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர்…

‘தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல், வழக்கிலிருந்து விலகிக் கொள்ளலாம்’

தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்கு, தனக்கு அறிமுகமான தரப்பினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்து விலகிக்கொள்ளவிருப்பதாக, சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் உறுதியளித்துள்ளதாக மலேசிய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. மலேசியப் பார் கவுன்சில் தலைவர் ஜோர்ஜ்  வர்கிஸ், அத்தகைய நிலைமை ஏற்பட்டால், சட்டத்துறை தலைவராக செயல்பட, தேசிய வழக்குரைஞருக்குச் சட்டம்…

பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்த ஆர்வலர், பிரதமரிடம் மனு…

2016-ல், பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா (பிஎன்எம்) ஊழியர் கோகிலா ஞானசேகரன் இன்று பிரதமரிடமும் மனித வளத்துறை அமைச்சரிடமும் ஒரு மனுவைக் கையளித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அணியின் (ஜெரிட்) ஆர்வலருமான கோகிலா, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர், மனித வள அமைச்சில் அமைச்சர்…

‘ஜிஇ14-ல் தோல்விகண்ட போதிலும், அரசியல் சமூகப் பணிகள் தொடரும்’, பேராக்…

நடந்து முடிந்த நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தில் போட்டியிட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் அனைவரும் தோல்விகண்ட போதிலும், கட்சியின் அரசியல் சமூக நல போராட்டங்கள் எந்நிலையிலும் பாதிப்படையாமல், தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என நேற்று கூடிய கட்சியின் மாநிலத்…

மகாதிர் : மக்களுக்குத் தேவைப்படும் வரை, நான் பணியாற்றுவேன்

துன் டாக்டர் மகாதிர் முகமட், மக்கள் விரும்பும் வரை அல்லது அவரது சேவை மக்களுக்குத் தேவைப்படும் வரை, பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறினார். "ஆனால், நிச்சயமாக நான் எவ்வளவு காலம் வாழமுடியும் என்பது எனக்குத் தெரியாது," என்று கூறிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனக்கு 95…

‘மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதே என் கே.பி.ஐ.’

அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளதாகப் புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் உறுதியளித்தார். சில மருத்துவமனைகளால் அவ்வாறு செய்ய முடிகிறது என்றும் நாடு முழுவதும் அதனைச் செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இது என் கே.பி.ஐ.-இன் (செயல்திறன் காட்டி அட்டவணை) ஒரு…

புதிய தேசியக் கார் திட்டம், மகாதிர் விருப்பம்

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், ஒரு புதிய தேசியக் கார் திட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாக வலியுறுத்தியுள்ளார், புரோட்டனின் கிட்டத்தட்ட பாதி பங்கு சீனாவிற்கு விற்கப்பட்ட நிலையில். “புரோட்டன் இப்போது தேசியக் கார் இல்லை. "அது இப்போது சீனாவுக்குச் சொந்தமானது. "ஆசிய நாடுகள் மற்றும் நமது பங்காளிகளின் உதவியுடன்…

தேவையில்லாமல் தமிழர்களைச் சீண்டாதே! ஆகம அணிக்கு மலேசியத் தமிழர் களம்…

பத்துமலைத் திருக்கோயில், ஐயா தம்புசாமிப் பிள்ளை என்ற ஒரு தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழர்களின் நிருவாகத்தின் கீழ், உலகப் புகழ் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனின் திருத்தலமாக இன்று பெருமைகொண்டு நிற்கிறது. பத்துமலைத் திருத்தலம், மலேசியத் தமிழர்களின் சொத்துடைமையாக திகழ்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது பத்துமலைத் திருக்கோயில் மலேசியத்…

பேங்க் நெகாராவின் முன்னாள் மேலாளர் கோகிலாவுக்கு நீதி வேண்டும்

கடந்தாண்டு ஜூலை 19-ம் தேதி, மலேசிய தேசிய வங்கியில் 12 ஆண்டுகளாக மேலாளராக இருந்த கோகிலா பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பேங்க் நெகாரா கூறிய காரணம், மே 1, 2016 தொழிலாளர் தினத்தன்று நடந்த ஒரு பேரணியில், ‘பாதால் ஜிஎஸ்டி’ (ஜிஎஸ்டி-யை ஒழிப்போம்) எனும் டி-சட்டையை கோகிலா…

சலாஹூடின் : சொத்துக்கள் அறிவிப்பு நேர்மையை மீட்டெடுக்கும் சரியான நடவடிக்கை

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் செயலாளர்கள் அனைவரும் பிரதமரிடம் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பது, பொது ஊழியர்கள் நேர்மையை நிலைநாட்ட ஒரு துல்லியமான நடவடிக்கை ஆகும். விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், பரிசு போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நியாயமானது, இதனால் எந்தவொரு…

ஜிஇ14 கேமரன் மலை முடிவு மீதில் சவால்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், பிகேஆர் வேட்பாளர் எம்.மனோகரன் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனோகரன், 59, சி.சிவராஜ்-க்கு எதிராக, குமார் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கை…

ஜோ லோவின் வழக்கறிஞர் எம்ஏசிசி-ஐ தொடர்பு கொள்ளவில்லை

1எம்டிபி-உடன் தொடர்புள்ள, சர்ச்சைக்குரிய தொழில் முனைவர் ஜோ லோவின் வழக்கறிஞர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. "ஜோலோவின் வழக்கறிஞர் எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை, அவர் ஏன் நேரிடையாக பேசாமல், வழக்கறிஞர் மூலம் பேச வேண்டும்?" என்று மலேசியாகினியிடம்…