பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்ற வேண்டும்

தமிழ் ஈழ இராணுவ அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை, மலேசியப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அகற்றக் கோரும் வழக்கு, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த 2020 அக்டோபர் 9-ஆம் தேதி, மேல்முறையீட்டு…

`மீண்டும் இருமொழி பாடத்திட்டத்தைத் திணிக்கும் முயற்சி, பெற்றோர்கள் விழிப்புநிலை கொள்ள…

தமிழ்வழி கல்வி கட்டமைப்பைச் சிதைக்கும் இருமொழி (டி.எல்.பி) பாடத்திட்டத்தை மீண்டும் தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள் விழிப்புநிலை கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2003-ஆம் ஆண்டில் கணிதம் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் (பி.பி.எஸ்.எம்.ஐ. -…

கோத்தா இஸ்கண்டார் தேர்தல் முடிவு ஊக்கமளிப்பதாக இருந்தது – பி.எஸ்.எம்.

பி.ஆர்.என். ஜொகூர் | ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), மாநிலத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றான N49 கோத்தா இஸ்கண்டாரில், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முதல் முறையாகப் போட்டியிட்டது. பிஎஸ்எம் வேட்பாளர் அரங்கண்ணல் இராஜு என்ற அரா, தன் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாமல் போனாலும், சுமார்…

அரசியல் நிலப்பரப்பை மாற்ற விரும்பும் இரண்டு கலைஞர்கள் தேர்தல் களத்தில்

ஜொகூர் பி.ஆர்.என். | நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றுவதுடன், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை, ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.)  தங்களைப் போட்டியிடத் தூண்டியதாக இரண்டு கலைஞர்கள் கூறியுள்ளனர். மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஒரே வேட்பாளரான அரங்கண்ணல் இராஜூ, 46, ஒரு திரைப்பட இயக்குநர்;…

பி.எஸ்.எம். : சார்புநிலையையும் சமத்துவமின்மையையும் உடைக்க வேண்டும்!

மகளிர் தின சிறப்பு செய்தி | இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டக் கருப்பொருள், “சார்புகளை உடைக்கவும்” என்பதாகும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பாலினச் சார்புகளுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவருவதையே இக்கருப்பொருள் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலினம், நிறம், தேசியம், உயரம், அடையாளம், உடல் ஊனம், பாலுணர்வு…

பி.எஸ்.எம். : நதிகள் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த…

பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டாருக்கான மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ எனும் அரா, ஜொகூரில், குறிப்பாக கோத்தா இஸ்கண்டார் பகுதியில் ஏற்பட்டுள்ள நதி மாசுபாடு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகளை முன்வைத்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பி.எஸ்.எம். சுற்றுச்சூழல் மற்றும்…

பி.எஸ்.எம். : ஜொகூர் தொழிலாளர் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்…

பி.ஆர்.என். ஜொகூர் | மலேசியத் தொழிலாளர்கள், குறிப்பாக ஜொகூர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் வேட்பாளர் அரங்கண்னல் இராஜு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நம்மோடு பகிர்ந்து கொண்டார். இன்று மதியம் நடந்த அச்சந்திப்பில், கட்சியின் தொழிலாளர்…

தாமான் யூ அரசு கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை…

பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டார் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை முன்மொழிந்த ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டி (தாமான் யூ) அரசு சுகாதாரக் கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை எனும் கோரிக்கையை வலியுறுத்தினார்.…

பி.ஆர்.என். ஜொகூர் : அம்னோ-பாரிசானை மீண்டும் புறக்கணிப்போம்!

எதிர்வரும் மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ள 15-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) மலேசிய மக்கள் கட்சிக்கு (பி.ஆர்.எம்.) உடன்பாடில்லை என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கோ சுவி யோங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜொகூர் சட்டமன்றத்தைக் கலைக்க நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. மக்களின் வரி பணமான அரசாங்க…

பி.ஆர்.என். ஜொகூர் : கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை…

ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), N49 கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நேற்று வெளியிட்டது. நேற்று மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம்…

ஜொகூர் பி.ஆர்.என்.: கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். போட்டி

2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் (N 49) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். ஜொகூர் மாநில அரசியல் களம் பி.எஸ்.எம். கட்சிக்குப் புதிய ஒன்றல்ல எனவும், சுமார் 15…

ஜொகூர் பி.ஆர்.என். : பி.எஸ்.எம். தனது வேட்பாளரை அறிவித்தது

மார்ச் 12-ல் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), திரைப்பட இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ, 46, கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) நேற்றிரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது. N49 கோத்தா இஸ்கண்டாரில் அரங்கண்ணல் களமிறக்கப்படுவார் என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன்…

போலீஸ் காவலில் 7 இறப்புகள் : விசாரணை நடத்தி ஐ.பி.சி.எம்.சி.…

2022-ம் ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில், போலிஸ் தடுப்புக்காவலில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து, 50 சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இன்று (11.02.2022), புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் வழங்கிய குறிப்பாணையின் முழு விவரம் பின்வருமாறு :- போலிஸ் காவலில் நிகழ்ந்த இறப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு…

`தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்` – பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

எதிர்வரும் தைத் திங்கள் முதலாம் நாள் பிறக்கும் திருவள்ளுவராண்டு 2053-ஆம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை அனைத்து மலேசிய வாழ் தமிழர்களுக்கும் உவகையோடு தெரிவித்துகொள்கிறது. தை துவக்கத்தைச் சீர்மிகு செந்தமிழர் புத்தாண்டாக வரவேற்பதை நமது சங்க இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன. தமிழர் தாயகத்தைத் தாண்டி தமிழர்…

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டாட்ட வழிமுறைகள்

எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௰௫௩ (2053), தை மாதம் (சுறவம்) 1ஆம் நாள், வெள்ளிக்கிழமை நன்னாளில் பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டையும் பொங்கல் திருநாளையும் மதம் கடந்து பண்பாட்டு அடையாளத்துடன் கொண்டாட மலேசியா மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரும் அணியமாகிக் கொண்டிருக்கிறோம்.தமிழர் வானியல் கணிதமுறைப்படி சூரியன் சுறவ ஓரைக்குள் (தை மாதம்)…

எங்கள் விதைகள் ..

சுதந்திரம் வலிமையான விதை நானும் இங்கு வாழ்கிறேன் எனக்கும் சுதந்திரம் வேண்டும் உங்களைப் போலவே. உங்களைப் போலவே என் காலின் கீழ் மிதிபட்டுக் கிடக்கும் நிலம் எனக்கும் சொந்தம். ஒவ்வொரு நாளும் ரொட்டித் துண்டை நம்பி வாழ முடியாது வாழும்போது மறுக்கப்படும் உங்கள் கருணைச் சுதந்திரம் செத்த பின்…

தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர். டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு…

2021 ஒரு கண்ணோட்டம் : அமைதியற்ற நிலையில் மலேசியா

2021-ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் நாம் உள்ளோம், மலேசியாவில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூகப்-பொருளாதாரக் குழப்பங்கள் சிலவற்றைப் பற்றி ஒரு கண்ணோட்டமிடுவோம் வாருங்கள். 1. தொடரும் கோவிட்-19 தொற்றுநோய் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 பாதிப்பில் இருந்து மலேசியாவும் விடுபடவில்லை. 2020-ஆம்…

பயணங்கள் முடிவதில்லை! ~ சசிகுமார் இராகவன்

கள மொன்றைக் கண்டேன், படை யேதுமில்லை.  குடி லொன்றைக் கண்டேன், உயி ரோட்டத்தோடு.   உடன் நின்றுக் கொண்டேன், உள மார அன்று. மனம் சொன்ன வழியே, சில நண்பர் களோடு. உடன் வரச்சொல்லி கேட்டது முண்டு, வந்தவரில் சிலர் விடைபெற்றதும் நன்று.   இரசித்திட இதுவோ, கதை யொன்றுமில்லை, களம் கண்டபின்பு, கன…

விடியல் அரசின் அகதிகள்!

சென்னையின் பிரதான பகுதியான வில்லிவாக்கம் இரயில் நிலையம் அருகில் கடந்த ஜி.கே.எம். காலனி கொளத்தூர் பூம்புகார் நகர் வினாயகபுரம் உள்ளிட்ட ஆண்ட ஆளுகின்ற கட்சிகளின் அரசியல் புள்ளிகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு நகர்களுக்குப் பிரதான நுழைவாயில் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொளத்தூர் அவ்வை நகரில் (GKM colony 35…

‘ஜெய்பீம்’ படம் அல்ல பாடம் ~ யோகி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சில திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களைப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாகவும் பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த…

நாகேந்திரனுக்கு உரிய நடைமுறை வழங்கப்பட்டது – சிங்கப்பூர் அதிபர்

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கம் சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பெற்றுள்ளார். நாகேந்திரனின் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, யாங் டி பெர்த்துவான் அகோங் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல் முஸ்தபா பில்லா ஷா அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இவ்வாறு…

இந்தோனேசியத் தொழிலாளர்களின் தற்காலிக முடக்கம் தொடரும்

மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் ஹெர்மோனோ, கோவிட் -19 காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக இறப்பு விகிதம் காரணமாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான தற்காலிக முடக்கத்தை நாடு நீட்டித்துள்ளது என்றார். கோவிட்-19 பாதிப்புகள் குறைக்கப்பட்டு, இந்தோனேசியத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்போது முடக்கம் நீக்கப்படும் என்றார். தொற்றுநோய் காரணமாக, கடந்த…