புதிய நேர்வுகள் 20,780, ஏழு மாநிலங்களில் 4 இலக்கங்களில் எண்ணிக்கை,…

கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,780 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நேர்வுகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், மற்ற ஆறு மாநிலங்கள் 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன. செயலில் உள்ள நேர்வுகளின்…

28.3% மலேசியர்கள் 2 மருந்தளவு தடுப்பூசிகளை நிறைவு செய்துள்ளனர் –…

நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 28.3 விழுக்காடு அல்லது 9,246,295 பேர், நேற்று வரையில் இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை முடித்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா கூறினார். தனது அதிகாரப்பூர்வ கீச்சகத்தில், ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்து, 16,119,916 பேர் முதல் மருந்தளவைப் பெற்றதாக…

ஊழல் : ஜொகூர் பாரு மாநகர முதல்வர் 3 நாள்களுக்குத்…

ஜொகூர் பாரு மாநகர முதல்வர், ஆடிப் அஸாரி டாவூட், ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவ மூன்று நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விண்ணப்பத்தை அனுமதித்த பிறகு, அந்த 60 வயது மூத்த அதிகாரி மீதான மறு உத்தரவை, மாஜிஸ்திரேட் முகமது ஜுல்ஹில்மி இப்ராஹிம்…

மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் எரிந்தது, நோயாளி காயமடைந்தார்

தஞ்சோங் மாலிம், சிலிம் ரீவர் மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில், நேற்று இரவு ஆக்ஸிஜன் எரிவாயு சிலிண்டர் தீ விபத்தில், ஆண் நோயாளி ஒருவர் தீக் காயமடைந்தார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர், இரவு 7.42 மணிக்கு அழைப்பைப் பெற்ற பின்னர், சிலிம் ரீவர் தீயணைப்பு…

முஹைதீனை நிராகரித்து 35 பிகேஆர் எம்.பி.க்கள் அகோங்கிற்குக் கடிதம்

பிரதமர் முஹைதீன் யாசினை நிராகரித்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்குத் தனது கட்சி கடிதம் அனுப்பியதைப் பிகேஆர் உறுதிப்படுத்தியது. பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர், ஃபாஹ்மி ஃபாட்சில் இந்தத் தகவலை உறுதி செய்தார். "உண்மை. அனைத்து பிகேஆர் எம்.பி.க்களும் மஹியட்டீன் எம்டி யாசினின் தலைமையை ஆதரிக்கவில்லை, நிராகரிக்கிறோம் என்று பிகேஆர் அகோங்கிற்கு…

‘பழிவாங்க மக்கள் பணத்தைப் பயன்படுத்தாதீர்’ – சனுசியிடம் பி.எஸ்.எம். வலியுறுத்து

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்கு பற்றி, சமீபத்தில் "மோசமாக கேலி" செய்த கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோரை அவமதித்ததாகக் கூறி, மூன்று நபர்களைத் தடுத்து வைத்ததற்காக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) காவல்துறையைக் கடுமையாக சாடியது. அதன் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன்,…

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான நன்மைகள் : எஸ்.ஓ.பி. வழிகாட்டி

முழுமையாக தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான, விரிவான செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் (எஸ்.ஓ.பி.) தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.)  வெளியிட்டுள்ளது. தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் சில சலுகைகளை அறிவித்த பிறகு இந்த எஸ்.ஓ.பி.க்கள் வெளியிடப்பட்டன. வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களை வீட்டிலேயேத் தனிமைப்படுத்துதலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு மாநில,…

இராமசாமி : கெடா எம்.பி.யை விமர்சித்த மூத்தக் குடியை உடனே…

கெடா மந்திரி பெசார் முஹமது சனுசி முகமது நோரை விமர்சித்து, வீடியோ பதிவு ஒன்றைப் பரப்பியதற்காக, 61 வயது மூத்த குடிமகன் ஒருவரை அதிரடியாகக் கைது செய்ததன் காரணம் குறித்து பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ பதிவில், பிணக் கொள்கலன் குறித்த…

எம்.எம்.ஏ. : முழு அளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும், முழு அளவிலான தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்களுக்கான தளர்வை, அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) விரும்புகிறது. எம்எம்ஏ தலைவர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி, கோவிட் -19 நேர்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும்போது மட்டுமே, இத்தகையத் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று…

முஹைதீனை நிராகரித்து, இஸ்தானாவுக்கு எதிர்கட்சியினர் கடிதம் 

முஹைதீன் யாசினுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற கட்சியின் எம்.பி.க்கள் அடங்கிய 13 கடிதங்களை அம்னோ வெளிப்படுத்திய பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை நிராகரிக்கும் கடிதம் ஒன்றை மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த எதிர்க்கட்சி வட்டாரம் தெரிவித்தது. அமானா மற்றும் பெஜுவாங்-ஐ சேர்ந்த இரண்டு ஆதாரங்கள், இந்தக் கடிதம்…

17,236 புதிய நேர்வுகள், 212 மரணங்கள்

கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,236 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 212 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 10,961- ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 15,187 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 2

இந்த நீல பெருங்கடல் வியூகம் (Blue Ocean Strategy), யாரோ ஒரு சில கல்விமான்களின் ஏரணச் சிந்தனையில் உதித்த உத்தி அல்ல. இது கல்விக் கோட்பாடும் (academic theory) அல்ல. இது நடைமுறையில், பயன்பாட்டில் உள்ள உத்திகளின் தொகுப்பு. காலங்காலமாக (100 ஆண்டுக்கும் மேல்) நிலைத்து நிற்கும் பல்வேறு…

பேரணி தொடர்பான விசாரணைக்கு எம்.பி.க்களை அழைப்பதை நிறுத்துங்கள் – சிம்

கடந்த திங்கட்கிழமை, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி எம்.பி.களிடம், விளக்க அறிக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு, பிகேஆர், பாயான் பாரு எம்.பி. சி த்ஷி த்ஷின் காவல்துறையக் கேட்டுகொண்டார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல், டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்தில் சாட்சியம் அளிக்க 30-க்கும்…

முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற அம்னோ எம்.பி.க்களின் கடிதம் –…

சபா துணை முதல்வர் போங் மொக்தார் ராடின் மற்றும் கிமானிஸ் எம்.பி., மொஹமடின் அலமின் உள்ளிட்ட, முஹைதீன் யாசினைப் பிரதமராக ஆதரிக்காத 13 எம்.பி.க்களின் கடிதங்களை அம்னோ வெளிப்படுத்தியது அக்கடிதம் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அனுப்பப்பட்டது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரையில் தேதியிடப்பட்ட இந்தக் கடிதங்களை…

டிஏபி எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி, ‘டுரியான் RM30’ – குற்றச்சாட்டை…

தேசியக் கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தால், அமைச்சர் பதவிகள் உட்பட, பல சலுகைகள் வழங்கப்படும் என்ற அணுகலை எதிர்கொண்டதாகக் கூறிய மூன்று டிஏபி எம்.பி.க்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சந்தித்ததாகக் கூறியது. எம்ஏசிசி இன்று ஓர் அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், இது குறித்து தொடர்ந்து…

திபிஎம் : எல்லைகள் கடக்க நெகிழ்வுத்தன்மை, குடும்ப உறவுகளுக்குப் பயனளிக்கும்

நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, இரண்டு மருந்தளவுகள் தடுப்பூசி முடித்த தனிநபர்கள், தொலைதூரத்தில் இருக்கும் தங்கள் இணையைச் சந்திக்கவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சந்திக்க பெற்றோர்களுக்கும் மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான நெகிழ்வுத்தன்மை, நாட்டில் குடும்ப உறவுகளுக்கு பெரிதும் பயனளிக்கும். துணைப் பிரதமர், இஸ்மாயில் சப்ரி யாகோப், வளரும் குழந்தைகளைப்…

இரு தடுப்பூசிகளைப் பெற்ற தனிநபர்களுக்கான நெகிழ்வுத்தன்மை

கோவிட் -19 தொற்றுக்கு எதிராக, முழுமையாகத் தடுப்பூசி பெற்ற தனிநபர்களுக்கான தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளைப் பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார். முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்களுக்கான சில வசதிகள் இதோ:- தேசிய மீட்புநிலை திட்டக் கட்டத்தைப் (பிபிஎன்) பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களுக்கும் :- 1) மலேசியாவுக்குத் திரும்பும் வெளிநாட்டிலிருந்து…

பி.எஸ்.எம். : அவசியமற்றவற்றைத் தொடர்புகொள்வதில், தடமறிதலில் பிஎன் அரசாங்கம்

கருத்து | எந்தவொரு குழப்பமான ஆளும் கட்சியும், ஆட்சியில் தொடர்ந்து இருக்க, உயிர்வாழ்வதற்கான செய்முறை ஒன்றுதான் - வற்புறுத்தல் அல்லது அதிகாரத்தைக் காட்டுதல். வற்புறுத்தல் வேலை செய்யவில்லை என்றால், கருத்து வேறுபாட்டைச் சமாளிக்க ஒரே வழி அதிகாரம்தான். சீர்திருத்த காலத்தில் நாம் இதனைப் பார்த்தோம், அப்போதையப் பிரதமர் டாக்டர்…

ஐஜிபி: ஆகஸ்ட் 21 போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பேரணியை ஏற்பாடு செய்யவோ அல்லது பங்கேற்கவோ பிடிவாதமாக இருக்கும் எந்தத் தரப்பினருக்கும் எதிராக, தனது துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். தனது தரப்பினருக்கு, இந்தத் திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்தச் செயல்…

அம்னோவுக்கு எதிரான ஆர்.ஓ.எஸ்.-இன் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது –…

அம்னோ தேர்தல்களை 18 மாதங்களுக்கு ஒத்திவைப்பது செல்லாது என்று தீர்ப்பளித்த சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்ஓஎஸ்.) நடவடிக்கையைத் தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெர்சே விமர்சித்தது. ஓர் அறிக்கையில், அத்தேர்தல் கண்காணிப்பு குழு, இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விவரித்தது. "ஆர்ஓஎஸ் முடிவு, அம்னோ பிரதமர் முஹிதீன்…

பிகேஆர் : ‘ஐந்து எம்.பி.க்களை வாங்கும் முயற்சி, வெட்கக்கேடான செயல்’

பிரதமர் முஹைதீனை ஆதரிப்பதற்காக, தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.க்களை 'வாங்க' முயற்சிப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார். பல டிஏபி எம்.பி.க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவிகள் உட்பட, பல பரிசுகள் வழங்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து சைஃபுதீன் இதனை வெளிப்படுத்தினார். "எம்.பி.க்களை வாங்குவதற்கான முயற்சிகள்…

பிஎன் அரசாங்கம் வீழ்ந்தாலும், நாட்டின் நிர்வாகம் தொடர்ந்து செயல்படும் –…

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் ஆட்சியில் இல்லை என்றால், நாட்டின் நிர்வாகம் முடங்கிபோகும் என்றக் குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார். "இது உண்மையில்லை. இது ஓர் உணர்வு, பிரச்சாரக் குழு மக்களை அச்சுறுத்தும் வகையில் இதனை வடிவமைக்க முயற்சிக்கிறது. "அதிகாரம், நிலை மற்றும் பதவியைத்…

19,257 புதிய நேர்வுகள்; கெடா, சபாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று பிற்பகல் வரையில், 19,257 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த தொற்றுநோய் எண்ணிக்கையை 1,243,852-ஆக உயர்த்தியுள்ளது. நான்கு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன. கிள்ளான் பள்ளத்தாக்கு 2,450 நேர்வுகளுடன், அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள…