அமெரிக்கா செல்லும் ஈழத்தமிழர்களின் உடலின் எச்சங்கள்!

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு!!

புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, உலகத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களின்…

தமிழர்கள் தொடர்பில் முக்கிய கருத்த வெளியிட்ட சீனா!

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.…

இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவதிப்படும் தமிழ் மக்கள்!

வட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக செயற்படுமாறு காலநிலை அவதான மையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் வடக்கின் பெரும்பாலான பகுதிகளில்…

விடுதலைப் புலிகளை இனிமேல் நினைவுகூர கூடாது ! பயங்கரவாத தடுப்பு…

விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை இனிமேல் நடத்தக் கூடாது என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அச்சுறுத்தியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான அனுமதியை உங்களுக்கு யார் கொடுத்தது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இனிமேல் விடுதலைப் புலிகளின்…

கூட்டமைப்பால் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே…

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் மக்களின் காணிகள்; இராணுவம் அறிவிப்பு!

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில்…

ஜேர்மனியில் நடந்த அடுத்த காட்டிக் கொடுப்பு: தமிழனே தமிழனுக்கு எதிரி…

2005ல் இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமரை நாம் மறந்திருக்கமாட்டோம். இவர் சந்திரிக்கா பண்டார நாயக்கவின் அறிவிக்கப்படாத புருஷனும் ஆவார். இவர் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட விடையம் உலகறிந்த ஒன்று. தமிழனாக இருந்தும். சிங்களவர்களுக்கே வாலாட்டி திரிந்தவர் இவர். இவர் சிவாஸ் ரீகல் விஸ்கியை மாலை…

இலங்கையில் சீனாவின் நகரம்; அதிரும் உலகநாடுகள்!

இலங்கையில் கடல்பரப்பை நிரப்பி அமைக்கப்பட்ட துறைமுக நகருக்கான நிலப்பரப்பை உருவாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக சீனாவின் அபிவிருத்தி நகரம் கட்டியெழுப்பப்பட உள்ளது. குறித்த நகரம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக,…

இலங்கை கடற்படையின் படகை மோதித்தள்ளிய தமிழர் படகு!

நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப்…

இலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம்

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைபெறுவது வழக்கம். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை…

யாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம்; கோவிலுக்கு செல்ல அச்சப்பட்ட மக்கள்!

தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத போதும்,…

நாடு இரண்டாகிறது! சம்பந்தரும் சுமந்திரனும் முட்டாள்களில்லை!! மகிந்த சீற்றம்!!!

தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். “புதிய அரசமைப்பில், வடக்கு…

ஈழத்தில் நேர்மையாக உண்மையாக எழுதுவது தற்கொலைக்கு சமமானது!தீபச்செல்வன் பேட்டி

ஈழத்தில் போராளிகளின் குழந்தைகள், முன்னாள் போராளிகள், இளந்தலைமுறையினர் எனப் பலரும் எழுதத் துவங்கியுள்ளனர். நாங்கள் எழுத்தால் போராட வேண்டிய காலம் இது. போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைப்பதிலும் ஏற்றுக்கொள்வதில் மாத்திரமே எங்களுடைய இருப்பு தங்கியுள்ளது என்று ஈழ எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் தெரிவித்தார். நடுகல் என்னும் நாவல் சென்னைப் புத்தகத்…

‘தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடேன்’

இந்நாட்டில், மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டுமெனில், தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இதை, புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவே தனது பிரதான கடமையென்றும் கூறியுள்ளார். அத்துடன், தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும்…

போர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்!

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இன்னமும் போரின் அக வடுக்கள் தீரவில்லை. இன அழிப்புப் போரின் எல்லா தடங்களையும் சிங்கள அரசு அழித்துவிட்டது. இன்னமும் எஞ்சியுள்ள ஈழ மனிதர்களையும் அழித்துவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை என்ற யோசனையில்தான் நகர்வுகளை இன அழிப்பு அரசு முன்னெடுக்கின்றது. உண்மையில்…

‘தமிழீழ கனவு வேண்டாம்’ சுமந்திரன்!

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி…

மார்ச் 20இல் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது சிறிலங்கா குறித்த அறிக்கை

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்,…

அரசியல் நோக்கிலான பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் – வடக்கு…

தமிழ்ப் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக்…

‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு

இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல. ஆனால் அந்தக் கருத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் நியாயங்கள்தான் கேள்விக்குரியவை ஆகின்றன. இது, ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது. ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட,…

தமிழ் – முஸ்லிம் உறவு: பிட்டும் தேங்காய்ப்பூவும்

பல்லினங்களும் வாழ்கின்ற ஓர் ஆட்புலத்தில், எவ்வாறு சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் நடந்து கொள்வது என்ற பாடத்தை, இலங்கையில் இனவாதிகள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் சிலரும், இன்னும் பட்டறிந்து கொள்ளவில்லையோ என்ற வலுவான சந்தேகத்தை, அண்மைக்கால சம்பவங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு…

பதற்றமடைந்த மட்டக்களப்பு; ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழர்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பெயரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களில் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழர்களின் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகள்…

தமிழர் பகுதிகள் எங்கும் மனிதப்புதைகுழிகள்; வெளியான அதிர்ச்சி தகவல்!

மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தகவல் வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித…