தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாகவே இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நாவலவில் உள்ள சுதந்திர…

தடுப்பூசியால் பல்கலை மாணவர் பலி; மறுக்கும் மருத்துவமனை

தடுப்பூசிக்கு ஒவ்வாமையால் பல்கலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை குறித்த மாணவன் கல்லீரலில் ஏற்பட்ட புற்று…

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு சாத்தியம்

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு…

குற்றவியல் நீதிக்கான அமெரிக்க தூதுவருடன் எம்.ஏ. சுமந்திரன் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் பெத் வான் ஷாக் (Beth Van Schaack) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெத் வான் ஷாக்கின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம்(15) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சுமந்திரன் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில்…

இலங்கை அணியில் இருந்து மஹீஷ் தீக்‌ஷன நீக்கம்

நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும ்இந்திய அணிகளுக்கு இடையிலான 2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில்  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷன இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அணியில் அவர் இடம்பெறவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது தொடை…

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்

திருகோணமலையில் 13 ஆம் திகதி மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை நேற்று (14) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு…

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்

இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 ஆவது அமர்வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை…

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன…

புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு” இவ்வாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின்…

மனித எச்சங்களை மறைக்கவே பௌத்த விகாரைகளை அமைக்கின்றனர்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில்…

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். "2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை…

உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிய இலங்கை

சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இதனை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த…

போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் நடந்திருக்காது

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சூத்திரதாரி யாராக இருக்கும் என்பது தொடர்பான சந்தேகங்கள், ஊகங்கள், தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே எல்லோர் மனதிலும் அவரவர் தன்மைகளுக்கு ஏற்ப எழுந்துள்ளன. இப்பின்புலத்தில் சனல் 4 தொலைக்காட்சி முழு விபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளராக…

கஹவத்த சம்பவத்தை வைத்துக்கொண்டு நாம் அரசியல் நடத்த முற்படவில்லை

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையின் மூலம்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஜெனிவாவில் கனடா சுட்டிக்காட்டு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தை இலங்கை அரசு உரிய முறையில் கையாள வேண்டும் எனக் கனடா வலியுறுத்தியுள்ளது. புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் எனவும் கனடா கோரியுள்ளது. ஜெனிவா அமர்வில் சுட்டிக்காட்டு இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தைப் பேணுவது குறித்து…

இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய நிறுவனம்: 1000 பேர் வேலை இழக்கும்…

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிர்வாக உத்தியோகத்தர், முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார். இதற்கிடையில், ஆடைத் தொழில்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசியல் ஆதாயம் மற்றும் சேறு பூசும் பிரசாரங்களிலிருந்து விடுபட்ட முற்போக்கான, மேம்பட்ட தீர்வே தேவை என்றும், உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த உண்மையில் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் என்றும், 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் வாக்குறுதியளித்த…

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தேயிலை கலவை தொழில்நுட்பத்தில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதனால் சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாதுகாப்பு மீளாய்வுக் குழு நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் பாதுகாப்பு மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய இந்த மீளாய்வுக் குழுவில் 2030 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான 'பாதுகாப்பு…

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 ஆவணப்படம்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.…

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய…

வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை பெண்கள்

வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 20/20 போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி பெற்றிருந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது 20/20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 19 ஓவர்களில்…

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி தர மறுத்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைக்கு, விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், இப்பணியை நேரடியாக…