இலங்கை – தாய்லாந்துக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான குறைந்த கட்டண நேரடி விமான சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எயார் ஏசியாவின் AIQ-140 விமானம் தாய்லாந்தின் Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு 10.10 மணியளவில் வந்தடைந்துள்ளது. அந்த விமானத்தில் 134 பயணிகள்…

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம்

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை பிரச்சினைகளில் தொடர்புடைய பங்குதாரர்களிடையே ஓர் புரிதலை உருவாக்கும் விதத்தில் T20 என்னும் அமைப்பினால்…

தேர்தலுக்கு பணமில்லை, ஆனால் 5 பில்லியன் பங்குகளை வாங்க முயலும்…

தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம். அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை அரசாங்கத்துடன் தொடர்பான நிதி நிறுவனம் கொள்வனவு செய்வது பிரச்சினைக்குரிய விடயம் என்றும், தேர்தலுக்குக்…

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு காண நடவடிக்கை

மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவினால் இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் எழுந்துள்ள மருந்துகள் கொள்முதல் செயல்முறை…

பொருளாதார குற்றவாளிகளால் அழிவடைந்த தேசமாக இலங்கை

சட்டங்களை இயற்றுவதனால் மாத்திரம் இலங்கையில் ஊழலை ஒழிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஊழல் வாதியொன கூச்சலிட்டவர்கள், தற்போது அவரின் கீழுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…

ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் – சஜித் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றும் வகையிலேயே ஊழல் எதிர்ப்பு சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுவருகின்றதே தவிர, ஊழலை ஒழிப்பதற்கான நோக்கம் அவர்களிடம் இல்லை என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச சாடியுள்ளார். ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்று…

13 ஐ அமுல் செய்ய அரசை சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த…

இலங்கை துறைமுகங்களுக்கு ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்கள்

சிறிலங்காவின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஐரோப்பிய நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பெல்ஜிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை…

இலங்கையில் அடுத்த மாதம் முதல் கஞ்சா பயிர்ச்செய்கை

நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் குறித்த திட்டத்திற்கு 11…

நாட்டில் தொடரும் மயக்க மருந்து காரணமான மரணங்கள் : விசாரணை…

கொழும்பு - தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள்…

இலங்கையில் திருப்பதி கோவிலை கட்ட கோரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையில் திருப்பதி கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் (ஏபி) உள்ள திருப்பதி கோவிலுக்குச் செல்ல விரும்பும் ஏராளமான பக்தர்கள், ஆனால் பயணம் செய்ய முடியாத…

தங்க ஜெல்லை உடையில் மறைத்து கடத்த முயன்ற விமான நிலைய…

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வரியில்லா வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை, ஐந்து கிலோ எடையுள்ள 100 மில்லியன் தங்க ஜெல்லை கடத்த முயன்ற போது கைது செய்தனர். 24 வயதுடைய பெண், நான்கு பார்சல்களில் போதைப்பொருளை மறைத்து…

ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டி.பி சேனாநாயக்க, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பான ஐ.ஆர்.ஓ, ஜப்பானின் தலைவர் திரு நோரிகை சுகாவிடம், இலங்கை இளைஞர்களை தொழில்நுட்ப பயிலுனர்களாக இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கோரியுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று…

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும்

நாட்டில் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…

வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம் – நாமல்

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கஸ்பாவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

மருந்து தட்டுப்பாட்டை நீக்க அரசின் திட்டம்

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். “நிலையான நாட்டை நோக்கி – அனைவரும் ஒரே பாதையில்” என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக…

விடுதலை புலிகளின் நோக்கத்திற்காக செயற்படும் கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்…

சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடந்து கொண்ட விதத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

ஜனாதிபதி புலம்பெயர் தமிழரிடம் மன்னிப்பு கோர வேண்டும்

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்றைய தினம் கலந்துகொண்டு ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதனை தெரிவித்தார் - பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்த எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல்…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இல்லாமல் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு சாத்தியமில்லை

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமல் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு சாத்தியப்படாது என நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். வியாழனன்று (ஜூன் 29) ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் (டி.டி.ஓ.) பற்றி ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதிச்…

சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள ரணிலின் செயற்பாடு

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தம்மிடம் கேள்வி கேட்டவரை கேலி செய்தமையானது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. முக்கிய கேள்விக்கு பதில் 'உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டால், தமிழில் பேசுங்கள், எனக்கு தமிழ் புரியும்' என்று அவர் அண்மையில் பிரான்ஸில் வைத்து கூறியதன் மூலம், முக்கிய கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்க்கிறார்…

முன்னால் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் காலாவதியான குளிர்பானம்

யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார்.…

சித்தாந்தங்களின் போராக மாறும் இலங்கை தேர்தல்

இலங்கையின் அடுத்த தேர்தல் சித்தாந்தங்களின் போராக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீர்திருத்தங்களை சீர்குலைக்காத, அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சியாக தமது கட்சி வாக்காளர்களிடம் செல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில்…